← Back to list
MU-க்கு சவாலான போட்டி!
Aug 16, 2024

 
 
புதிய premier லீக் தொடக்க ஆட்டத்தில் விளையாட Manchester United தயாராக இல்லையாம். 
அணிக்கு புதிதாகக் கொண்டு வந்த Matthijs de Ligt-டுக்கும் Noussair Mazraoui-க்கும் போதுமான பயிற்சி இல்லாததே அதற்குக் காரணம். 
அதுமட்டுமில்லாமல், அணியில் Luke Shaw உள்ளிட்ட மேலும் சிலர் காயப் பிரச்சனையில் இருந்து வருவதால், எப்படி நாளைய ஆட்டத்தை தமதணி கடக்கப்போவதாக தெரியவில்லையென, நிர்வாகி Erik Ten Hag புலம்பிக்கொண்டிருக்கிறார். 
MU - Fulham மோதும் ஆட்டத்தை நாளை அதிகாலை 3 மணிக்கு Astro அலைவரிசை 813-இல் நேரலையாகக் கண்டு களிக்கலாம். 
---------   
முன்னாள் Chelsea நிர்வாகி mauricio pochettino, அமெரிக்க ஆடவர் தேசிய அணியின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
முன்னதாக, கோப்பா அமெரிக்கா குழு நிலையிலான ஆட்டத்த்தோடு அவ்வணி வெளியேறியதைத் தொடர்ந்து, Gregg Berhalter நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 
---------   
தேசிய Powerlifting வீரரான Bonnie Bunyau Gustin, வரவிருக்கும் பராலிம்பிக் போட்டியில் முதல் இடத்தை தக்க வைத்து, உலகச் சாதனையைப் படைக்க உறுதி பூண்டுள்ளார்.  
ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கும் அப்போட்டியின் தொடக்க ஆட்டத்தில், அவர் களமிறங்குகிறார்.  
-------   
Negeri Sembilan காற்பந்து அணியின் புதிய நிர்வாகியாக K.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather