← Back to list
வெற்றிக்கு அணியும் உடை முக்கியமல்ல!
Aug 15, 2024

 
விளையாட்டு வீரர்களின் உடை குறித்து விமர்சனங்கள் வெளியிடுவதை நிறுத்துங்கள் ! 
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh, அனைத்து மலேசியர்களையும் அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். 
போட்டியில் சிறந்த படைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதே நமது விளையாட்டாளர்களின் நோக்கமே ஒழிய, அவர்கள் அணியும் உடை அல்ல என அவர் திட்டவட்டமாக கூறினார். 
அண்மையில் முக்குளிப்பு வீரர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் பரவலானதைத் தொடர்ந்து வெலுத்து வரும்  விமர்சனங்களை அடுத்து, அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
-------   
சரவாக் சுக்மா போட்டியின் பதக்கப் பட்டியலில், மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று Terengganu முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
அப்பட்டியலில், மலாக்காவும் Selangor-ரும் இரு தங்கப் பதக்கங்களுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன.  
---------  
Liverpool-இல் இருந்து வெளியேறி, Red Bull Salzburg அணிக்கு செல்லவிருக்கிறாராம் Bobby Clark ! 
அவரை ஒரு கோடி பவுண்ட் தொகையில் விற்கும்  The reds-சின் நிபந்தனைகளுக்கு,  Salzburg இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
--------   
Valencia-வின்  Giorgi Mamardashvili-யை ஒப்பந்தம் செய்வதில் Liverpool அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. 
The Reds, Real Sociedad-டின் Martin Zubimendi-யை  ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனதைத் தொடர்ந்து, Valencia கோல்காவலர் மீது குறி வைத்துள்ளது.   
---------  
Scott McTominay-யை இரவலில் எடுக்க, Napoli, Manchester United-டிடம் கலந்து பேசியிருப்பதாக சில தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather