← Back to list
சிறுமிக்கு மனநல பிரச்சனையா!
Aug 12, 2024
சிலாங்கூர், செர்டாங் மருத்துவமனையில் ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்த 14 வயது சிறுமிக்கு மனநல பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அச்சிறுமி, கடந்த மார்ச் மாதம் மனநல சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும், ஆனால் எந்த தொடர் சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.
அந்த சிறுமி, சமூக நலத் துறைக்கு கண்காணிப்புக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.
அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முடிவுகளைப் பொறுத்தே தமது தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் என மாநில காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து, அச்சிறுமி விசாரிக்கப்பட்டு வருகிறாள்.ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து, அச்சிறுமி விசாரிக்கப்பட்டு வருகிறாள்.
---------
இவ்வாண்டு இதுவரை, Drone-களைப் பயன்படுத்தி, சிறைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 7 சம்பவங்கள், வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.
அச்சம்பவம் Kedah, Perak, Melaka, Kelantan, Sarawak ஆகிய மாநிலங்களில் நடந்ததாகவும், அதன் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் Bukit Aman கூறியது.
மிக அண்மையில், அச்சம்பவம் பேராக் தாப்பா சிறைச்சாலையில் நடந்ததாக அது சொன்னது.
பிற்காலத்தில் அம்மாதிரியான சம்பவங்கள் நிகழாமல் இருக்க, சிறைத்துறை அதன் சீர்திருத்த வசதிகளில், Drone எதிர்ப்பு தொழில்நுட்பத்தை நிறுவும் என முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
----------
Melaka Alor Gajah-வில் கடந்தாண்டு மத்தியில், குப்பைத் தொட்டிக்குள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் அடையாளத்தை காவல்துறை கண்டறிந்துள்ளது.
டிசம்பர் 26-ஆம் தேதி Johor Pasir Gudang-கில் காணாமல் போனதாகக் கூறப்படும் 33 வயது பள்ளி ஆசிரியர் தான் அது என, DNA பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்பில் பேராக் Chemor-ரில் இருவர் கைதான நிலையில், அவர்களில் ஒருவரின் தடுப்புக் காவல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
---------
பேராக், Kuala Kangsar-ரில் ஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, ஓர் ஆடவர் மீது Sesyens நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather