Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வாகனமோட்ட பழக 3000 ரிங்கிட்டா !

Aug 07, 2024


வாகனமோட்ட பழக 3000 ரிங்கிட்டா !

வாகனமோட்டும் பயிற்சிகளுக்கு சில பள்ளிகளில் 3,000 ரிங்கிட் வரை கட்டணமாக விதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், கட்டண விகிதத்தை வாகனமோட்டும் பயிற்சி மையங்கள் தற்காத்து பேசியுள்ளன. 

வாகனப் பராமரிப்புச் செலவு, காப்பீடு செலவு உள்ளிட்ட அம்சங்களையும் அக்கட்டண நிர்ணயம் உட்படுத்தியிருப்பதாக, மலேசிய வாகனமோட்டும் பயிற்சி மையங்களின் சங்கம் தெளிவுப்படுத்தியது. 

பார்க்கப் போனால், மிக மிகக் குறைந்த விலையில் பயிற்சிகளை வழங்கும் மையங்கள் குறித்து தான், பொது மக்கள் கவலைப்பட வேண்டும்; 

காரணம், அது போன்ற மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பயிற்சிகள் சாலைப் போக்குவரத்துத் துறை JPJ-வின், பாதுகாப்பு விதிமுறைகளைப்  பின்பற்றாமலிருக்க வாய்ப்புண்டு என, FMT-யிடம் அச்சங்கம் கூறியது. 

--------  

Nur Farah Kartini கொல்லப்பட்டதற்கான உண்மையான காரணத்தை, காவல்துறை இன்னும் வெளியிடவில்லை. 

அப்பெண்ணின் முழு பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.  

கடந்த மாத மத்தியில், Perak Tanjung Malim-மிலிருந்து காணாமல் போன அப்பெண், Hulu Selangor-ரில்  உள்ள செம்பனை தோட்டமொன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

---------   

சிலாங்கூர், செப்பாங்கில் 12 வயது சிறுவன் காரோட்டியதற்காக, அச்சிறுவன் மீதும் அவனின் தந்தை மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

தனது வயது குறைந்த மகனை கார் ஓட்ட அனுமதித்ததாக, அச்சிறுவனின் தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்ட வேளை,  வாகனமோட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை மீறி கார் ஓட்டியதாக அச்சிறுவன் குற்றஞ்சாட்டப்பட்டான். 

அவ்விருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர். 

--------   

மற்றொரு பக்கம், மரணத்தை உட்படுத்திய மோட்டார்சைக்கிள் விபத்துகளின் எண்ணிக்கை, கவலையளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.  

போக்குவரத்து சட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரம் இல்லாமல் இருப்பதும், சாலை பராமரிப்பு தொடர்பான பிரச்சனைகளும் அவ்விபத்துகள் ஏற்படுவதற்கான காரணமென, Datuk Seri Anwar Ibrahim கூறினார்.  

-------   

இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 11 மரணங்கள் பதிவானதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.  

---------   

தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 16, 2024 வரையிலானத் தனது ‘Inilah KITA’ பிரச்சாரத்தை ஆஸ்ட்ரோ அறிமுகப்படுத்தியது. 

 KITA அலைவரிசை (அலைவரிசை 100) அத்துடன் 6 இலவச அலைவரிசைகளில், Inilah Kita பிரச்சாரத்தை கண்டு மகிழுங்கள். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather