← Back to list
தங்கப் பதக்கம் மலேசியா வெல்லுமா?
Aug 06, 2024

 
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கத்தை வெல்லும் இலக்கோடு, நாட்டின் மூன்று Track சைக்கிள் வீரர்கள் நாளை களமிறங்குகின்றனர்.
Datuk Azizulhasni Awang, Muhammad Shah Firdaus Sahrom, Nurul Izzah Izzati Mohd Asri அவர்களாவர். 
அம்மூவரும் தங்களை சிறந்த நிலையில் தயார்படுத்திக் கொண்டு வருவதாக, Track சைக்கிளிங் அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். 
ஒலிம்பிக் போட்டியின் நேரடி ஒளிபரப்பைக் காண S O O K A-வை subscribe செய்யுங்கள்; அல்லது 24 மணி நேர பாசை வாங்கலாம்.
-------  
இதனிடையே அப்போட்டியில் நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தைப் வென்று தந்த பூப்பந்து வீரர்கள், Aaron Chia-Soh Wooi Yik மற்றும் Lee Zii Jia-வுக்கு புதிய கார்கள் காத்திருக்கின்றன. 
சம்பந்த்தப்பட்ட அந்த காரின் நிறுவனம், அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, காரைகளைப் பரிசாகக் கொடுக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது.
----------  
அப்போட்டியில் பூப்பந்து வீரர் Lee Zii Jia வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், உலகத் தர வரிசையில் அவர் 6-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
அரையிறுதிக்கு முன்னேறிய Pearly Tan-M Thinaah ஜோடியும் ஒரு படி முன்னேறி உலக தரவரிசையில் 11-வது இடத்தை பிடித்திருக்கின்றனர்.
---------   
PSG-யின் Manuel Ugarte-வை அணிக்கு கொண்டு வரும் Manchester United-டின் ஆசைக்கு ஒரு முற்றுப்புள்ளி ! 
அந்த மத்திய திடலாட்டக்காரை வாங்குவதற்கு 5 கோடியே 10 லட்சம் பவுண்ட் தொகைக்கு மேல் கேட்கப்படுவதே அதற்குக் காரணம். 
மாறாக, வேறொரு மத்திய திடலாட்டக்காரரை ஒப்பந்தம் செய்ய விரும்புகிறதாம் United. 
--------  
Manchester City, Julian Alvarez-சுக்கு நிர்ணயித்த, 8 கோடிக்கும் அதிகமான  பவுண்ட் தொகைக்கு Atletico Madrid இணங்கியுள்ளதாம். 
Erling Haaland-டின் வருகையால் City-யில் Alvarez-சின் முக்கியத்துவம் குறைந்திருப்பதே, அவரின் அந்த விலகல் முடிவுக்குக் காரணமெனக் கூறப்படுகிறது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather