← Back to list
சம்பள உயர்வு அறிவிப்பு !
Aug 06, 2024

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான விவரங்களை பிரதமர் இம்மாதம் அறிவிப்பார்.
அதன் முழுமையான விவரங்கள், 2025-ஆம் ஆண்டு வர செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் போது அறிவிக்கப்படுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்திட்டம், தகுதி மற்றும் நியாயமானது எனக் கூறிய Datuk Seri Anwar Ibrahim, ஏற்கெனவே அத்திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தது, ஆனால் அது இப்போது தான் செய்ய முடிந்தது என்றார்.
நாட்டின் வரலாற்றில் அந்த சம்பள உயர்வு மிக அதிகமாக இருக்கும் என முன்னதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
------
Johor Iskandar Puteri-யில் ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து வெளியிடும் நேரம் நெருங்கிவிட்டதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள முதன்மை சந்தேக நபரிடன் நடத்தப்பட்ட விசாரணையில், புதிய தடயங்களை கண்டுபிடித்திருப்பதாக மாநில காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான பொருட்களை வைத்திருந்ததற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அச்சந்தேக நபர் மீண்டும் கைதானார்.
---------
பிரதமர் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தொடர்பான பதிவுகளை நீக்கியதற்கு META நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
செயல்பாட்டு கோளாரால் அப்பதிவுகள் அழிக்கப்பட்டதாக அது விளக்கமளித்தது.
அப்பதிவுகள் மீண்டும் பிரதமரின் கணக்குகளில் மறு பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக, அது சொன்னது.
----------
போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், விபத்துகளை ஏற்படுத்தினாலும், இல்லாவிட்டாலும், அவர்கள் கடுமையான அபராதத்தை நேரிட வகை செய்யும் அளவுக்கு, நடப்பு போக்குவரத்து சட்டங்களை திருத்த, போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
--------
Sheikh Hasina Wazed, பிரதமர் பதவியைத் துறந்து, வங்காளதேசத்தை விட்டு வெளியேறியிருப்பதை அடுத்து, அவரின் பரம வைரியும் மற்றொரு முன்னாள் பெண் பிரதமருமான Begum Khaleda Zia சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather