Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பதவி விலகியுள்ளார் Sheikh Hasina !

Aug 05, 2024


பதவி விலகியுள்ளார் sheikh hasina !

 

கலவரமாகியுள்ள வங்காளதேசத்தில் புதிய திருப்பமாக, அந்நாட்டு பிரதமர் Sheikh Hasina பதவி விலகியுள்ளார். 

தலைநகர் டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்ததை அடுத்து, ராணுவ Helicopter வழியாக அவர் தப்பிச் சென்றுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, அவர் இந்தியாவிற்கு பயணமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

அவர் பதவி விலகக் கோரி, வங்காளதேசத்தில் வார கடைசியில் புதிய கலவரங்கள் வெடித்ததை அடுத்து, ஒரே நாளில் 98 பேர் மரணமடைந்தனர்.

1996-ஆம் ஆண்டில் முதன் முறையாக பிரதமரான Hasina, பிறகு 2009-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி, இன்று வரை அப்பதவியில் நீடித்தார்.

இதன்வழி, உலகில் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்த பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். 

Hasina-வின் பதவி விலகலைத் தொடர்ந்து், வங்காளதேசத்தில் இடைக்கால அரசாங்கம் விரைவிலேயே அமைக்கடும் என அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.  

----------   

Johor-ரில் ஆறு வயது சிறுமியை கடத்திய சந்தேக நபர், ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்.  

அவரின் வீட்டில், சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் நேற்று மீண்டும் கைதானார்.  

13 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு, நேற்று காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மீண்டும் அதே நாளில் கைதானார். 

அந்த 31 வயதான ஆடவர், முன்னதாக Iskandar Puteri-யில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த நிகழ்வில், அச்சிறுமியை கடத்தியதாகக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  

பின்னர் அச்சிறுமி Selangor, Batang Kali-யில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டாள்.  

-----------   

பிரதமர் அலுவலகத்திற்கு வரும்படி, சமூக ஊடக சேவை வழங்குநரான Meta-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

படுகொலை செய்யப்பட்ட Hamas தலைவர் Ismail Haniyeh-வுக்கு இரங்கல் தெரிவித்த, பிரதமரின் சமூக ஊடக பதிவுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, விளக்கமளிக்க அவ்வலுவலகம் Meta-வை அழைத்திருக்கிறது.  

அது குறித்து Meta விசாரிக்கப்பட்டு வருவதாக, முன்னதாக தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்திருந்தது. 

--------   

வணிக வாகனங்களை ஓட்டுபவர்களின் கவனக்குறைவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து, அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் !  

அத்தகைய ஓட்டுநர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை விதிக்க வகை செய்யும் அளவுக்கு, நடப்பு சட்டங்கள் திருத்த வேண்டும் என மலேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.  

-------  

அரசு ஊழியர்கள், தங்களின் புதிய சம்பள விகிதத்தை அடுத்த வாரம் சரி பார்த்துக்கொள்ளலாம்.  

அடுத்த வாரம் 16-ஆம் தேதி, புதிய அரசு சேவை சம்பள திட்டம் தொடர்பான விவரங்களை, பிரதமர் அறிவித்த பிறகு, தாங்கள் அவ்வாறு செய்யலாம் என பொது சேவைத் துறை தெரிவித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather