← Back to list
அரையிறுதியில் கலப்பு இரட்டையர்!
Aug 01, 2024

Paris ஒலிம்பிக் போட்டியில், தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையர் Pearly Tan / M Thinaah, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 
சற்று முன்பு நடந்த காலிறுதி ஆட்டத்தில், அவ்விருவரும் தென் கொரிய ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றனர். 
தங்களுக்கு முழு மனதோடு ஆதரவளித்த அனைத்து மலேசியர்களுக்கும் தீனா நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
அரையிறுதியில் Pearly-யும் தீனாவும், உலகின் முதல் நிலை ஆட்டக்காரர்களான சீன ஜோடியை எதிர்கொள்கின்றனர். 
----------  
அதே போட்டியில், காலிறுதிச் சுற்றில் தேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையர் Aaron Chia/ Soh Wooi Yik, இன்றிரவு 7 மணிக்கு காலிறுதியில் களமிறங்குகின்றனர். 
இதனிடையே, ஆடவர் பூப்பந்து ஒற்றையர் Lee Zii Jia இன்றிரவு மணி 8.10க்கு கடைசி 16 அணிகள் மோதும் ஆட்டத்தில் France ஆட்டக்காரரை சந்திக்கிறார்.
பேரிஸ் ஒலிம்பிக் குறித்த விரிவான செய்திகளையும், நேரடி ஒளிபரப்பையும், Astro-வில் காணலாம்.
-----------
Manchester United-டிலிருந்து, முதல் அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து வெளியேறியுள்ளார் Steve McClaren ! 
அங்கிருந்து வெளியாகிய அவர், தற்போது Jamaica-வின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
----------  
பருவத்திற்கு முந்தைய நட்புமுறை ஆட்டத்தில், Man United - Real Betis-சை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்துள்ளது. 
அவ்வெற்றியாட்டத்தின் போது Marcus Rashford காயத்திற்குள்ளாகி, இரண்டாம் பாதி ஆட்டத்தோடு வெளியேறினார். 
----------   
அதே நட்பு முறை ஆட்டத்தில், Chelsea 3-0 என Club America-வை தோற்கடித்த வேளை, Liverpool 2-1 என Arsenal-லை வீழ்த்தியது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather