← Back to list
8.9 பில்லியன் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு!
Apr 04, 2024
வெளிநாட்டினர்களின் மருத்துவச் செலவுகளுக்கான நடைமுறைகளை சுகாதார அமைச்சு மதிப்பாய்வு செய்து வருகிறது.
கடந்த ஆண்டு வெளிநாட்டினர்களிடமிருந்து பத்து கோடி ரிங்கிட் மருத்துவக் கட்டணம் செலுத்தப்படவில்லை என வெளிவந்துள்ள கூற்றையும் அவ்வமைச்சு மறுத்துள்ளது.
உண்மையான தொகை 4 கோடி ரிங்கிட் மட்டுமே என அமைச்சு தெளிவுபடுத்தியது.
----------
அரசாங்கம் இவ்வாண்டு, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை 8.9 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தவுள்ளது!
இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மந்திரி பெசார்கள் மற்றும் முதலமைச்சர்களுடனான சந்திப்பிற்குப் பின், பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
-------
அரசாங்கம் விசா விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவை ஏப்ரல் 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாளுக்கு முன்பு, கணினியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
-------
இன்னும் 140 மலேசியர்கள் வேலை மோசடியால் பாதிக்கப்பட்டு, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை அவ்வமைச்சு மீட்டது.
---------
Selangor, Kubu Baharu சட்டமன்ற உறுப்பினர் கடந்த மாதம் இறந்ததை அடுத்து, அத்தொகுதியின் இடைத்தேர்தல் மே 11-ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள் ஏப்ரல் 27-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிப்பு மே 7-ஆம் தேதியும் நடைபெறும்.
-------
நாடு முழுவதும், நேற்று 2, 044 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளை, 15 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல் துறை, தகவல் வெளியிட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather