← Back to list
500 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை!
Apr 03, 2024
நோன்பு பெருநாள் முன்னிட்டு, கிளந்தான், கெடா, பெர்லிஸ் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும்.
அந்த தொகை, அடுத்தவாரம் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாளுக்கு பேருதவியாக இருக்கும்.
இதனிடையே, கிளந்தான் அரசாங்கம் ஏப்ரல் 9 ஆம் தேதியை, பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
---------
அரசு ஊழியர்களின் புதிய சம்பள திட்டம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அது தெரியவரும் என்றும், அது தற்போது இறுதி கட்ட வரைவில் இருப்பதாகவும் கூட்டரசு பிரதேச அமைச்சு தெரிவித்துள்ளது.
--------
இன்று காலை 10 மணி நிலவரப்படி, தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தைபேயில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் கவனமாக இருக்குமாறும் அவ்வமைச்சு வலியுறுத்தியுள்ளது.
-------
நாடு முழுவதும், நேற்று 2, 142 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளை, பத்து உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather