← Back to list
சாலை பராமரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்படும்!
Apr 01, 2024

 
நோன்பு பெருநாளையொட்டி, இன்று தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை அனைத்து சாலை பராமரிப்பு பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.  
அவசர பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.  
முன்னதாக, ஏப்ரல் 8, 9-ஆம் தேதிகளில் தனியார் வாகனங்களுக்கு மட்டுமே இலவச Tol கட்டணத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.  
------- 
நோன்பு பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமைத் தொடங்கி 500 ரிங்கிட் சிறப்பு உதவி நிதி விநியோகிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ Anwar Ibrahim அறிவித்துள்ளார்.  
அத்தொகை, Gred 56 மற்றும் அதற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் வேளை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 250 ரிங்கிட் வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.  
அந்த தொகை பெறுநர்களில், ஒப்பந்த அரசு ஊழியர்களும் அடங்குவர் என அவர் சொன்னார். 
-------- 
Rahmah நிதியுதவியின் இரண்டாம் கட்ட தொகை,  வரும் புதன்கிழமை தொடங்கி விநியோகிக்கப்படும்.    
மொத்தம் 84 லட்சம் மக்கள், 100 முதல் 650 ரிங்கிட் வரை, அந்த நிதி உதவியைப் பெறுவார்கள் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.   
--------
பிப்ரவரி 29-ஆம் தேதி வரைக்குமான தகவலின் படி, நாட்டில் வரி பாக்கி செலுத்தாத ஏறக்குறைய 1 லட்சத்து என்பத்து மூவாயிரம் தனிநபர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் முடக்கப்பட்டதாக  உள்நாட்டு வருவாய் வாரியம் தெரிவித்துள்ளது.  
கொடுக்கப்படும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வரி பாக்கிகளைச் செலுத்த வேண்டும், இல்லையென்றால் அவர்கள் வெளிநாட்டு பயணத்திற்கான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என  நிதித்துறை துணை அமைச்சர் Lim Hui Ying மேலவையில் தெரிவித்தார். 
-------- 
கோழி, முட்டை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவாகவே உள்ளது!  
தற்போதைய விலை, முன்புள்ள அரசாங்கத்தின் கீழ் இருந்ததை விட அது குறைவாகவும் நிலையானதாகவும் உள்ளது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather