← Back to list
மதம், இனம் சார்ந்த விஷயத்தில் கவனம்!
Mar 31, 2024
மதம் மற்றும் இனம் சார்ந்த அறிக்கை விடும்போது, அல்லது அவை சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடும் போதும் கவனம்!
ஒருமைப்பாட்டு அமைச்சர் அவ்வாறு எல்லா தரப்புகளையும் நினைவூட்டினார்.
நாட்டில் தேசிய கோட்பாடு என்பது நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், பராமரிப்பதற்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஓர் அடிப்படைக் கொள்கை.
அவற்றை கடைபிடித்து நடந்து கொண்டால் சிறப்பு என Datuk Aaron Ago Dagang X வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
------
அரசாங்கத்தின் முதன்மை தரவுத் தளமான Padu-வில் இதுவரை ஒரு கோடி மக்கள் பதிந்து கொண்டுள்ளனர்.
இன்றோடு பதிவு முடியவிருப்பதால், இன்னும் பதியாதவர்கள் விரைந்து பதிந்து கொள்ளுமாறு கேடுக்கொள்ளப்படுகின்றனர்.
--------
அண்மையில் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட இஸ்ரேலியர்களுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் மேலும் பலரை காவல் துறை அடையாளம் கண்டுள்ளது.
முன்னதாக அந்நபருக்குத் துப்பாக்கி விநியோகித்ததாகக் கூறப்பட்ட உள்ளூர் தம்பதி கைதானது.
-------
கெடா, Changlun-னில் மின்னல் தாக்கியதன் காரணமாக Matriculation கல்லூரி ஒன்றின் கூரை தீப்பிடித்தது.
அந்த தீ சம்பவத்தில் எந்தவொரு உயிருடற் சேதமும் ஏற்படவில்லை.
--------
பினாங்கு, Butterworthதில் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி, பணியில் இருந்த காவல் வீரருக்கு எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு நடந்துக் கொண்ட இருவர் கைது!
காவல் துறையிட பிடிப்படாமல் இருக்க தப்பியோடு முயன்ற .அவ்விருவரும் பின்னர் சம்பந்தப்பட்ட காவல் வீரருடன் மோதியதாக நம்பப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather