← Back to list
ஆசியக் குழு பூப்பந்து போட்டியில் ஏற்பட்ட காயப் பிரச்சனை!
Mar 27, 2024

 
ஆசியக் குழு பூப்பந்து போட்டியின் போது ஏற்பட்ட காயப் பிரச்சனை மீண்டும் ஏற்படுவதை, தேசியப் பூப்பந்துப் பயிற்சி மையத்தின் பயிற்றுநர் பிரிவு இயக்குநர் Rexy Mainaky விரும்பவில்லை. 
அடுத்த மாதம் Thomas கிண்ண பூப்பந்து போட்டி தொடங்கவிருக்கும் நிலையில் தேசிய அணியின் சில ஆட்டக்காரர்கள் காயம் அடைந்திருப்பதை அடுத்து, அவர் அவ்வாறு கவலை தெரிவித்துள்ளார். 
முன்னதாக, ஒற்றையர் பிரிவு ஆட்டக்காரர்களான Lee Zii Jia, Ng Tze Yong ஆகியோர் காயம் காரணமாகவும் மூச்சு பிரச்சனை காரணமாகவும் ஓய்வில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
--------- 
Roma-விலிருந்து நீக்கப்பட்ட பிறகு Club இல்லாமல் இருக்கும் Jose Mourinho, மீண்டும் நிர்வாகி பொறுப்புக்கு திரும்ப தயாராகியுள்ளார். 
என்றாலும், அடுத்து எந்த கிளப்பை தேர்ந்தெடுப்பது என்பதை யோசித்து முடிவெடுக்கப்போவதாக அவர் சொன்னார். 
சவுதி அரேபியாவுக்கு செல்லும் சாத்தியங்களையும் அவர் மறுக்கவில்லை. 
------- 
வரும் ஞாயிற்றுக்கிழமை,  Brighton-னுக்கு எதிராக Liverpool மோதவுள்ள நிலையில்,  Andy Robertson அதில் களமிறங்கமாட்டார் என கூறப்படுகிறது. 
Northern Ireland-துக்கு எதிரான Scotland-தின் நட்பு முறை ஆட்டத்தின் போது அவருக்கு கணுகாலில் காயம் ஏற்பட்டதே அதற்குக் காரணம். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather