← Back to list
பள்ளிபடிப்பை பாதியிலேயே விட்டவர்கள்!
Mar 27, 2024
நாட்டில் பள்ளிபடிப்பை பாதியிலேயே விட்டவர்களின் விகிதத்தை குறைக்க, கடந்த ஆண்டு, வறுமையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு 18 தனித்தனி உதவித் திட்டங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.
அந்த முயற்சிகள், கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே பள்ளியை விட்டு பாதியிலேயே நின்றவர்களின் விகிதத்தை 0.06 விழுக்காடாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
அதே காலகட்டத்தில், பள்ளியை விட்டு பாதியிலேயெ நின்ற இடைநிலைப்பள்ளி மாணவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 40 விழுக்காடு குறைந்துள்ளது.
----
PADU-வில் பதிவு செய்துக்கொள்ள பொதுமக்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என பொருளாதார அமைச்சு நினைவூட்டியுள்ளது.
பணம் செலுத்திதான் அத்தரவுத் தளத்தில் பதிய வேண்டும் போன்ற தகவல்கள் அண்மைய காலமாக சமூக ஊடகங்களில் வலம் வந்ததைத் தொடர்ந்து, அவ்வமைச்சு அவ்வாறு கருத்துரைத்தது.
--------
கெடா Pokok Sena, Kota Setar, Perak Hulu Perak, Perlis ஆகிய பகுதிகள் இன்று இரண்டாம் கட்ட வெப்ப அலையில் இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மற்ற 33 பகுதிகள் முதல் கட்ட வெப்ப அலையில் இருப்பதாக Met Malaysia சொன்னது.
-----
புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், இணைய பாதுகாப்பை மேம்படுத்தவும், சட்டமியற்றுபவர்களை Astro வலியுறுத்தியுள்ளது.
மேலும், இணைய கள்ளப் பதிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கவும் Astro சட்டமியற்றுபவர்கள கேடுக்கொண்டது.
இணைய உள்ளடக்க திருட்டு வேலைகள், ஆயிரக்கணக்கான மலேசிய வேலைகளை ஆபத்தில் ஆழ்த்துவதாக Astro கூறியது.
-----
நேற்று நாடு முழுவதும் 1,859 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள வேளை, 7 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசிய காவல் படை தகவல் வெளியிட்டுள்ளது.
-------
KL-இல் உள்ள ஒரு ரமலான் சந்தையில், Murtabak-குள் ஒரு துணி துண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த வியாபாரிக்கு சுகாதார அமைச்சு அபராதம் வழங்கியுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather