← Back to list
Padu-வில் உள்ள தரவுகள் கசியாது!
Mar 26, 2024

 
PADU-வில் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் எவ்வகையிலும் கசியாது! 
அவை அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக பொருளாதார அமைச்சர் Rafizi Ramli மீண்டும் உறுதியளித்துள்ளார்.  
Padu தரவுத் தளம் உயர்தர தரவு பாதுகாப்பு அம்சத்தைக்  கொண்டுள்ளதால், Hackers அவற்றை  ஊடுருவ முயன்றாலும், மக்களின் சுயவிவரங்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் சொன்னார். 
--------  
Islam மதத்தை புண்படுத்தும் வகையில் இருந்த காலுறை விற்பனை தொடர்பில் KK Mart கடையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் மீது, Sessions நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது!   
எனினும் வேண்டுமென்றே மத உணர்வுகளைக் காயப்படுத்தியதாகத் தங்கள் மீது கொண்டு வரப்பட்ட அக்குற்றச்சாட்டை, அத்தம்பதி மறுத்துள்ளது.   
----   
இதுவரை குறிப்பிட்ட சில சேவைகளுக்கான SST உயர்வு, பணவீக்கத்தில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.   
மார்ச் 1 முதல் அமுலுக்கு வந்த புதிய SST உயர்வு, வர்த்தகத்தை மட்டுமே உட்படுத்தியுள்ளது என அவர் சொன்னார்.  
-------   
Perlis மற்றும் பேராக், Hulu Perak, இன்று இரண்டாம் நிலை வெப்ப அலையில் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
தீபகற்ப மாநிலாங்களில் 40-க்கும் மேற்பட்ட பகுதிகள், சபா மற்றும் சரவாக், முதல் நிலை வெப்ப அலையில் இருக்கின்றன. 
-----   
நாடு முழுவதும் நேற்று  2,048 சாலை விபத்துகள் பதிவான வேளை 16 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Bukit Aman போக்குவரத்து காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.  
------   
KLIA-வில் உள்ள Aerotrain சேவை இவ்வாண்டு இறுதி அல்லது மார்ச் 2025 முதல் மீண்டும் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather