Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தமிழ் செயற்கை நுண்ணறிவு வசதிகள்!

Feb 21, 2024


தமிழ் செயற்கை நுண்ணறிவு வசதிகள்!

 

தொழில்நுட்பத்துக்கு நிகராக வளர்ந்து வரும் தமிழ் தொடர்பான செயற்கை நுண்ணறிவு வசதிகளை மலேசிய தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! 

இந்தியா சென்னையில் இம்மாதம் நடந்த கணித்தமிழ் மாநாட்டில் அதன் தொடர்பில் பல்வேறு தலைப்புகளும் கட்டுரைகளும் படைக்கப்பட்ட நிலையில், அவற்றுள் சில அம்சங்களை மலேசியாவுக்குக் கொண்டு வரத் திட்டமிடுவதாக, மலாயா பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர், Dr சி.ம.இளந்தமிழ் கூறுகிறார்... 

அதில் பல இலவசத் தளங்கள் இருப்பதாகவும், குறிப்பாக மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைவதாகவும் அவர் சொன்னார்.

அம்மாநாட்டில், Microsoft-டில் தமிழ் மொழியின் பயன்பாடு உள்ளிட்ட பல தமிழ் சார்ந்த தொழிற்நுட்பங்களைக் குறித்து பயிற்சி பட்டறை தொடர்ந்து நடைபெற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

பன்மொழிக் கல்வி - கற்றல் மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலின் தூண்" என்ற கருப்பொருளில் இன்று அனுசரிக்கப்படும் உலக தாய்மொழி தினத்தை ஒட்டி, ராகா செய்தி பிரிவு நடத்திய நேர்க்காணலில் இளந்தமிழ் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். 

------   

சரவாக் மாநில முன்னாள் ஆளுநர் Tun Abdul Taib Mahmud உடல்நலக் குறைவால் தனது என்பத்து ஏழாவது வயதில் காலமானார்! 

KL-லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவர் உயிர் பிரிந்ததை Astro AWANI உறுதிப்படுத்தியிருக்கிறது. 

கடந்த மாதம் வரை, மூன்று தவணைகளுக்கு சரவாக் ஆளுநராக Tun Taib இருந்துள்ளார். 

1981 முதல் 2014ஆம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவர், மிக நீண்ட காலம் அப்பொறுப்பை வகித்த பெருமையையுடையவராவார். 

------  

மலேசியா இவ்வாண்டு மிகப்பெரிய இணைய தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்நோக்கக்கூடும்!  

சுய விவரத் தரவு தொடர்பில் செயல்படும், பொருளாதார மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் கடும் அபாயத்தில் இருப்பதாக, உலக இணைய பாதுகாப்பு அமைப்பொன்று எச்சரித்துள்ளது. 

ஊடுறுவும் கும்பல் மோசடி செய்ய பல்வேறு புதிய யுக்திகளை அவ்வப்போது கண்டறிந்து வருவதால், நிறுவனங்கள் தங்களின் தரவு பாதுகாப்பை உறுதிச் செய்துக் கொள்ளும்படி அவ்வமைப்பு அறிவுறுத்தியது.  

கடந்தாண்டு மட்டும் மலேசியாவில் சராசரியாக ஒரு நாளுக்கு எழுபத்து நான்காயிரம் என்ற கணக்கில், மொத்தம் இரண்டு கோடியே அறுபது லட்சம் இணைய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.  

------- 

நெரிசலான உணவகங்களில் புகைப்பிடிக்க பிரத்தியேக இடம் ஒதுக்கும் பரிந்துரையை மலேசிய மருத்துவச் சங்கம் வரவேற்றுள்ளது! 

இதன் வழி கொஞ்சம் கொஞ்சமாக புகைப்பிடிக்கும் வழக்கத்தை மாற்ற முடியும் என அது நம்புகிறது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather