Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இந்தியர்களின் வளர்ச்சி !

Feb 08, 2024


இந்தியர்களின் வளர்ச்சி !

 

இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியே இவ்வாண்டு தனது முதன்மை இலக்காக இருக்கும் என Batu நாடாளுமன்ற உறுப்பினர் P பிரபாகரன் கூறியுள்ளார்! 

சமுதாயத்தின் பொருளாதார இடைவெளியைக் குறைப்பதிலும், எல்லா பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதிச் செய்வதிலும் தாம் கவனம் செலுத்தப் போவதாக, மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவின் சிறப்புப் பணிக்குழு MITRA-வின் புதிய தலைவராகியுள்ள அவர் தனது Facebook-கில் குறிப்பிட்டுள்ளார். 

தம்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய பிரதமர் துறைக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

பிரபாகரன் MITRAவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை நேற்று அறிவித்தது. 

துணை அமைச்சராகியுள்ள Datuk R Ramanan-னின் இடத்தை அவர் நிரப்புகிறார். 

------- 

இவ்வாண்டு டெங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 65 விழுக்காடு உயர்ந்துள்ளது! 

இது கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் பதிவானதை விட மிக அதிகம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இவ்வாண்டின் முதல் ஐந்து வாரங்களில் டெங்கியால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள தகவலையும் KKM வெளியிட்டது. 

எதிர்வரும் சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை சமயத்தில் டெங்கி பரவல் அதிகமாகலாம் என ஐயுறப்படுவதால், பொதுமக்கள் கூடுதல் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். 

-------  

நாட்டிலுள்ள எல்லா கூட்டரசு நெடுஞ்சாலைகளின் வேகக் கட்டுப்பாடும் தற்காலிகமாக ஒரு மணி நேரத்திற்கு 90லிருந்து என்பது கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது! 

சீனப்புத்தாண்டு சமயம் என்பதால் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை அது அமுலில் இருக்கும். 

அதோடு இந்த பெருநாள் சமயத்தில் அத்யாவசியம் அற்ற சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளும் இடைநிருத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பணி அமைச்சு கூறியது. 

-------  

இதனிடையே சீனப் புத்தாண்டு விடுமுறை நெடுகிலும் அதிகமான வாகனங்களை எதிர்ப்பார்க்கலாம்! 

இருபத்து நான்கு லட்சம் வாகனங்கள் தினசரி பிரதான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கணித்துள்ளது. 

------  

அரசாங்கத்தின் முதன்மை தரவுத் தளம் PADU-வில் இதுவரை கிட்டத்தட்ட 27 லட்சம் பேர் பதிந்து கொண்டுள்ளனர். 

PADU தளம் கடந்த மாதம் தான் அறிமுகம் கண்டது குறிப்பிடத்தக்கது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather