← Back to list
டெங்கி காய்ச்சல்: இரு மரணங்கள்
Jan 23, 2024
இம்மாதத்தின் இரண்டாம் வாரம் நாடு முழுவதும் பதிவான டெங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கையில் உயர்வு காணப்படுகிறது!
அக்காலகட்டத்தில் மூவாயிரத்து ஐநூரு டெங்கி சம்பவங்கள் பதிவானதோடு, இரு மரணங்களும் பதிவுச் செய்யப்பட்டன.
சிலாங்கூர் தான் டெங்கி அதிகம் பரவும் இடமாக உள்ளது.
KL, Putrajaya, Perak ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தைப்பூசத்திற்காக Rapid Bus நிறுவனம் Selangor, பத்துமலைக்கும், பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கும் இலவச பேருந்து சேவையை வழங்குகிறது.
Kuala Lumpur-ரில் 3 வழித்தடங்களையும் பினாங்கில் ஒரு வழித்தடத்தையும் அந்த இலவச பேருந்து சேவை உள்ளடக்கியிருக்கிறது.
அது போக, கட்டணத்துடன் கூடிய Rapid பேருந்துகளும் வழக்கம் போல் சேவையில் ஈடுபடும்.
ஜொகூர், Palo-வில் காலையில் பள்ளியில் இறக்கிவிட்ட தனது 17 வயது மகளை மதியம் காணவில்லை என தாய் ஒருவர் காவல் துறையிடம் புகாரளித்துள்ளார்.
விசாரித்ததில் அவர் அன்று பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சிலாங்கூர், Seri Kembangan-னில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உள்ளிட்ட எழுவர் கைதாகியுள்ளனர்.
ஜொகூர், Sri Alam-மில் தமது வங்கிக் கணக்கு குற்றச்செயலுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக, தொலைப்பேசியில் வந்த அழைப்பை நம்பி நிறுவனம் ஒன்றின் இயக்குனர் இரண்டரை லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
காவலதிகாரி மற்றும் மோசடி பதில் மைய அதிகாரி போல் அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
Rahmah உதவித் தொகையில் ஊழல் செய்ததன் தொடர்பில், பொதுச் சேவை ஊழியர் ஒருவரை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அம்மாது 22 ஆயிரம் ரிங்கிட் கோரியதாக நம்பப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather