← Back to list
மனநலம் குன்றியவர், குற்றமற்றவர் !
Jan 18, 2024
பின்தொடர்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முதல் சந்தேக நபரை மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது!
மனநல அடிப்படையில் அவர் குற்றமற்றவர் என Shah Alam Majistret நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மனநிலை சரியில்லாத அவர் தாம் என்ன செய்கிறோம் என்றும், பின்தொடர்தல் தவறு என்றும் தெரியாமல் அச்செயலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி, நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.
அந்நபர் மீது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு Skizofrenia எனப்படும் மனச்சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
எட்டு ஆண்டுகளாக ஒருவரைப் பின்தொடர்ந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தீபகட்பத்தில் அடுத்த மாதம் உயர்வு காணவிருக்கும் தண்ணீர் கட்டணம் நியாயமானதே!
அது பயனர்களுக்கு நீண்ட கால பயன்களைக் கொண்டு வரும் என எரிசக்தி மாற்ற மற்றும் பொது பயன்பாட்டு அமைச்சு நம்பிக்கை தெரிவித்திருக்கின்றது.
நீர் விநியோகச் சேவையைத் தரமுயர்த்தி பயனர்களுக்குத் தடையில்லா, தரமான நீரை வழங்குவதே அதன் நோக்கம்.
எனினும் அம்மாற்றத்தை உணர அவகாசம் தேவைப்படும் என அவ்வமைச்சு கூறியது.
வரும் February ஒன்று முதல் தீபகற்பத்தில் வீடுகளுக்கான தண்ணீர் கட்டணம் ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 22 சென் உயர்த்தப்படுவதாக தேசிய நீர் சேவை ஆணையம் தெரிவித்திருக்கின்றது.
---------
சிலாங்கூர், Hulu Bernamமில் இரு சகோதரர்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் 42 வயது சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்!
பதின்ம வயதிலான அவ்விருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததன் பேரில்அந்நபர் மீது விசாரணை நடத்தப்படுவதாகக் காவல் துறை சொன்னது.
இரு சகோதரர்களில் ஒருவர் கடந்த வாரம் LRT நிலையம் ஒன்றில் காணப்பட்ட நிலையில், மற்றொருவரைக் காணவில்லை.
---------
RON97, RON95 மற்றும் டீசலின் சில்லரை விலை 3 ரிங்கிட் நாட்பத்தேழு சென்னாகவும், இரண்டு ரிங்கிட் ஐந்து சென்னாகவும், இரண்டு ரிங்கிட் 15 சென்னாகவும் நிலைநிறுத்தப்படுகிறது!
இன்று முதல் 24 தேதி வரை அவ்விலை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather