← Back to list
பள்ளி தொடக்க உதவிநிதி மீண்டும் வழங்கப்படும்!
Jan 20, 2023
PLUSசின் கீழுள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இவ்வார இறுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனப் புத்தாண்டையொட்டிய நீண்ட விடுமுறையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவர்.
அதே சமயம் டோல் கட்டணம் இலவசம் என்பதால், அவ்வாய்ப்பையும் சிலர் பயன்படுத்திக் கொள்வர் என PLUS கூறியது.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, தங்களது பயணத்தை நன்கு திட்டமிடுமாறு அது வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறியது.
சிலாங்கூரில் கொள்ளையடிக்கப்பட்ட பள்ளி தொடக்க உதவிநிதிக்காக ஒதுக்கப்பட்ட ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகை , மீண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வழங்கப்படும்.
மார்ச் மாதம் புதிய கல்வித் தவணை தொடங்குவதற்குள் அத்தொகை சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்திருக்கிறது.
அதே சமயம், அக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தந்து சொந்த விசாரணையைத் தொடக்கியிருப்பதாகவும், அது கூறியது.
அண்மையில், பள்ளித் தலைமையாசிரியர் ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பணத்தை வங்கியில் இருந்து மீட்டு காரில் வைத்து விட்டு, உணவகமொன்றுக்குச் சென்று திரும்பிய போது அது களவாடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நாட்டில் சில மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 20 குடிநுழைவு கடப்பிதழ் வெளியீட்டு அலுவலகங்கள் அடுத்த வாரம் தொடங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்.
கடப்பிதழ் முகப்புகளில் நெரிசலைக் குறைக்க அவ்வாறு செய்யப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மற்றொரு நிலவரத்தில், 2019 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டதை விட கடந்த ஆண்டு 25 விழுக்காடு அதிகமாக 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட கடப்பிதழ்கள் வெளியிடப்பட்டதாக அது கூறியது.
அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள் போலிப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பெற உண்மையானப் பத்திரங்களை முன் வைக்குமாறு மனித வள அமைச்சு நினைவுறுத்தியது.
நாட்டில் சில முக்கியத் துறைகளில் வேலை செய்ய அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நடைமுறைகளில் தற்காலிகத் தளர்வு வழங்கப்படும் என முன்னதாக அமைச்சு அறிவித்திருந்தது.
அம்னோ கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்திருக்கிறார்.
எனினும் பஹாங், Bera அம்னோ தொகுதித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவிருப்பதாக அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather