Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி!

Apr 14, 2022


இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி!

கோவிட்-19 கிருமித் தொற்று எளிதில் பீடிக்கும் அபாயம் உள்ள தரப்பினர் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 

எனினும் அது தன்னார்வ அடிப்படையிலானது.

அதனைப் போட்டுக் கொள்ளாதவர்களின் தடுப்பூசி நிலை பாதிக்கப்படாது என சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin சொன்னார்.  

60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள், கடுமையான பல்வேறு உடல் உபாதைகளைக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி பெறலாம். 

அதோடு வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்களும் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாரவர்.

இவ்வேளையில், நாட்டில் கோவிட்-19 நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் நாடு endemic கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பதால் மேலும் சில SOPக்கள் தளர்த்தப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி!

நாட்டில் 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் இதுவரை 38. 7 விழுக்காட்டினர் மட்டுமே COVID-19க்கான முதல் தடுப்பூசி போட்டுள்ளனர். 

அதே வயதுடைய சிறார்களில், 6. 5 விழுக்காட்டினர் அதாவது 2 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர். 

12டில் இருந்து 17 வயதுடைய இளையோரில் 92.1 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ள நிலையில் பெரியவர்களில் 67.8 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி!

MySejahtera கோவிட்-19 பீடித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படுவது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

தேசிய மீட்சி மன்றம் அவ்வாறு பரிந்துரைத்துள்ளது.

நாடு endemic கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் நிலையைச் சுட்டிக் காட்டி அம்மன்றத் தலைவர் Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி!

ஜொகூர் அரசு அம்மாநில மக்களுக்காக Bantuan Kasih Bangsa Johor எனும் புதிய நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது. 

மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்குத் தலா 400 ரிங்கிட் வழங்கப்படும்; ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தலா 300 ரிங்கிட்டும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருக்கும் கூடுதலாக 50 ரிங்கிட்டுக்கும் கொடுக்கப்படும்.

அந்த உதவிகள் விரைவில் விநியோகிக்கப்படும் என மாநில Menteri besar தெரிவித்தார். 

எனினும் நேரப் பற்றாக்குறை காரணம் சிலருக்கு நோன்புப் பெருநாள் முடிவடைந்த பின்னர்தான் உதவிகள் கிடைக்கலாம் என்றாரவர்.  

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி!

PerantiSiswa Keluarga Malaysia திட்டத்தின் கீழ் B40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் உயர்க்கல்விக் கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

இணையம் வாயிலாக கற்றல்-கற்பித்தலை மேற்கொள்ளவும் குறிப்பு எடுக்கவும் அது அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather