Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விலை மேலும் குறைக்கப்படவுள்ளது!

Sep 26, 2021


விலை மேலும் குறைக்கப்படவுள்ளது!Covid-19 தடுப்பூசி மையங்களுக்குச் செல்லும் முன் தடுப்பூசி போட்டுக் கொள்ள தங்களது பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்ட தேதியை சரி பார்த்துக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு நினைவுறுத்தப்படுகிறது.

நாட்டில் இளையோருக்கு முழு வீச்சில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி மையங்களில் நெரிசலைத் தவிர்க்க சுகாதார அமைச்சு அவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது.

சில மாணவர்கள் நேரடியாக ‘walk-in’ முறையில் செல்லலாம் எனக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பால் பெற்றோர்களில் சிலர் குழம்பியிருப்பது தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகம் இருக்கக் காரணமாக இருக்கலாம்.

பள்ளிக்குச் செல்லாதவர்கள், வீட்டில் இருந்தே படிப்பவர்கள், தனியார் மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் பயில்வோர் ஆகியோர் மட்டுமே ‘walk-in’ முறையில் தடுப்பூசி பெற தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

விலை மேலும் குறைக்கப்படவுள்ளது!இன்னும் மூன்று வாரங்களில் மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இவ்வேளையில் உட்புறப் பகுதிகளில் Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள ராணுவம், சுகாதார அமைச்சிற்கு உதவவிருக்கிறது. 

நாட்டில் 90 விழுக்காட்டுப் பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கைத் துரிதமாக அடைய உதவும் பொருட்டு அவ்வாறு செய்யப்படுகிறது.

விலை மேலும் குறைக்கப்படவுள்ளது!Covid-19 சுய பரிசோதனைக் கருவியின் விலை இன்னும் சில நாட்களில் மேலும் குறைக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் தொடங்கி பள்ளிகள் கட்டங் கட்டமாகத் திறக்கப்படும் நிலையில், தங்களது பிள்ளைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள அக்கருவிகளை வாங்கும் பெற்றோரின் சுமையக் குறைப்பதே அதன் நோக்கமாகும்.

ஒரு Covid-19 சுய பரிசோதனைக் கருவியின் தற்போதைய உச்ச வரம்பு விலை 19 ரிங்கிட் 90 சென்னாகும். 

விலை மேலும் குறைக்கப்படவுள்ளது!அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படுவதற்குள் தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் உள்ள மாநிலங்களில் இருக்கும் அனைத்து பள்ளிகளும் முழுமையாகத் தயாராக வேண்டும்.

Covid-19 பரவலைத் தடுக்க காற்றோட்டம் நல்ல முறையில் இருப்பதை உறுதிச் செய்வதும் அதில் அடங்கும் என கல்வியமைச்சு கூறியது.

அக்டோபர் மூன்றாம் தேதி நெகிரி செம்பிலான், லாபுவான், லங்காவி ஆகியவற்றில் பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்குத் திறக்கப்படுகின்றன. 

விலை மேலும் குறைக்கப்படவுள்ளது!சுகாதார அமைச்சு புதிதாக 475 உருமாறிய Delta மற்றும் Beta வகைக் கிருமித் தொற்றுச் சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளது. 

அவற்றில் மிக அதிகமாக 472, Delta வகை கிருமித் தொற்றாகும்.

விலை மேலும் குறைக்கப்படவுள்ளது!Redang தீவுக்கு மாநிலம் கடந்து சுற்றுலா செல்ல முயன்ற அறுவருக்கு தலா ஐயாயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டது.

அவர்கள் KL, சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather