← Back to list
12 வயதூக்குக் கீழ்ப்பட்டோருக்குத் தடுப்பூசி!
Sep 24, 2021
 

12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கின்றது!
அதன் தொடர்பில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் தாம் பேசியிருப்பதாக சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.
12 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான தடுப்பூசியின் தரவு நன்கு ஆராயப்படும் என்றாரவர்.
------ 
பிள்ளைகளுக்கான தடுப்பூசி தேதி கிடைக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை Walkin முறையில் தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் செல்லவும் வேண்டாம் என கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது.
பிள்ளைகளுக்கான தடுப்பூசி குறித்து பெற்றோர்களிடையே பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவ்வமைச்சு, எந்த குழப்பமுமின்றி பள்ளி நிர்வாகங்களின் அறிவிப்புக்காகக் காத்திருக்குமாறு பெற்றோர்களை அறிவுறுத்தியது.
------ 
அடுத்த மாதம் பள்ளி நேரடி வகுப்புகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் குளிரூட்டியின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளும்படி கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது!
கோவிட் 19 பரவலைக் கட்டுப்பாட்டில் வைக்க பள்ளி கட்டிடங்களில் நல்ல காற்றோட்டமும், காற்றின் தரம் சீராக இருப்பதையும் உறுதிச் செய்ய அது அவசியமாவதாக அவ்வமைச்சு கூறியது.
-----
பினாங்கில் தடுப்பூசிக்குப் பதிந்து கொண்ட பெரியவர்களில் 4.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.
நேற்று அம்மாநிலத்தில் இளையோருக்கான தடுப்பூசி நடவடிக்கை தொடங்கியதை அடுத்து, சுமார் 11 லட்சம் இளையோருக்குத் தடுப்பூசி போட்டு முடிக்க முடியும் என மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.
------ 
நாட்டில் இன்று புதிதாக 14 ஆயிரத்து 554 கோவிட் 19 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
சரவாக்கில் ஆக அதிகமாக ஈராயிரத்து 800 சம்பவங்களும், சிலாங்கூரில் ஈராயிரத்து 200 சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.
------  
சிலாங்கூர், Shah Alamமில் உடைந்திருந்த நீர்க் குழாயைச் சரி செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட அனைத்து ஆறு இடங்களிலும் நிலைமை 100 விழுக்காடு சீரடைந்துள்ளதாக Air Selangor தெரிவித்துள்ளது.
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather