Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கோவிட் அல்லாத நோயாளிகள் புறக்கணிக்கப்படவில்லை!

Sep 14, 2021


 

கோவிட் அல்லாத நோயாளிகள் புறக்கணிக்கப்படவில்லை!

கோவிட் 19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் பிரதானமாக இருந்தாலும், மற்ற நோயாளிகள் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை!

கோவிட் அல்லாத நோயாளிகளுக்கான மருத்துவப் பராமரிப்புச் சேவைகள் எந்தக் குறையும் இன்றி வழக்கம் போலவே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

எந்தச் சூழ்நிலையிலும் சாதாரண நோயாளிகளும் தங்கு தடையுமின்றி உரிய சிகிச்சைகள் பெறுவதை தமதமைச்சு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருமென்றார் அவர்.

மக்களவைக் கூட்டத்தின் முதல் நாளான இன்று, சுகாதார அமைச்சர் என்ற முறையில் முதன் முறையாக கைரி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.  

---

தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்திலுள்ள பள்ளிகள் இப்போதைக்குத் திறக்கப்படாது என்பதை மீண்டும் தெளிவுப்படுத்தியிருக்கின்றார் கல்வி அமைச்சர் Datuk Dr Radzi Jidin.

மூன்றாம் தேதி தொடங்கி இரண்டாம் மற்றும் அதற்கடுத்த கட்டங்களிலுள்ள குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் மட்டுமே கட்டங்கட்டமாகப் பள்ளிகளுக்கு வருவர் என அவர் சொன்னார்.

மாணவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சுழல் முறையில் பள்ளிக்குச் செல்வர்.

அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளி நேரடி வகுப்புகள் கட்டங்கட்டமாக தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்த பிறகும் அது குறித்து சிலரிடையே இன்னும் குழப்பங்கள் நிலவி வருவதை அடுத்து அமைச்சு அதனைத் தெளிவுப்படுத்தினார்.

----- 

18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, அவர்களின் பிறந்த தேதிக்குப் பதிலாக, பிறந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசி போடப்பட வேண்டும். 

அவ்வாறு செய்தால் தான், 2003ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பிறந்தவர்கள் தடுப்பூசி போட்டு முடித்து, உயர்கல்வி கழகங்களுக்குச் செல்ல முடியும் என உயர்கல்வி அமைச்சு கூறுகிறது.

அவ்விவகாரத்தை தேசியத் தடுப்பூசித் திட்டக் குழுவின் பார்வைக்குக் கொண்டுச் செல்லுமாறு, அதிகாரிகளைப் பணித்திருப்பதாக அமைச்சர் Datuk Noraini Ahmad சொன்னார். 

தடுப்பூசி போடாத மாணவர்கள் உயர்கல்வி கூட வளாகங்களுக்கு வர அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

----- 

நாட்டில் இதுவரை பதிவாகியிருக்கும் கோவிட் 19 பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நேற்று மட்டும் 413 மரணங்கள் பதிவாகின.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather