← Back to list
சுகாதாரப் பணியாளர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும்!
கோவிட் 19-க்கு எதிரான போராட்டத்தில் மன நலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ள சுகாதார பணியாளர்களுக்கு கூடுதல் விடுமுறை கொடுப்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது.
அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
கோவிட் 19-னுக்கு எதிரான கடுமையான போராட்டத்தால், கடந்த 20 மாதங்களில் சுகாதார அமைச்சைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் பணியாளர்கள் பல்வேறு மனநல பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளதாக Berita Harian தகவல் வெளியிட்டிருந்தது.
------
நாடு முழுவதும் நேற்று மூன்று லட்சத்து 22 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டன.
மொத்தம் 71.3 விழுக்காட்டுப் பெரியவர்கள் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.
------
கடந்த ஜூலை மாதமும் நாட்டில் வேலையின்மை விகிதம் 4.8 விழுக்காடாக பதிவானதாக புள்ளி விவரத்துறை தெரிவித்துள்ளது.
என்றாலும் மேலும் ஏராளமான மாநிலங்கள் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் அதற்கடுத்த கட்டங்களுக்கு நகர்வதால், வரும் காலங்களில் அவ்விகிதம் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.
இன்று கிள்ளான் பள்ளத்தாக்கு இரண்டாம் கட்டத்திற்கு நகருகின்றது.
-----
பினாங்கு மாநிலத்தில் பதிவாகும் பெரும்பாலான கோவிட் 19 சம்பவங்கள் தொழிற்சாலை மற்றும் கட்டுமானத் தளங்களை உட்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அம்மாநிலத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தொழிற்சாலைகளையும் கட்டுமானத் தளங்களையும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
-----
விளையாட்டுச் செய்தி...
Brazil-லிய சகாப்தம் Pele-வை முந்தி அனைத்துலக அளவில் ஆக அதிக கோல்களை அடித்த தென்னமரிக்க ஆட்டக்காரராக, Lionel Messi திகழ்கிறார்.
அதிகாலை Argentina, 3-0 என Bolivia-வை வீழ்த்திய உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் அம்மூன்று கோல்களையும் அடித்த Messi, அதன் வழி அனைத்துலக அளவில் தனது கோல் எண்ணிக்கையை 79-தாக அதிகரித்துக் கொண்டார்.
அனைத்துலக அளவில் Pele 77 கோல்களை அடித்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather