← Back to list
‘Malaysia Prihatin’னை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்!
Aug 31, 2021
இவ்வாண்டுக்கான தேசிய தினக் கருப்பொருள் பரிவுமிக்க மலேசியா ‘Malaysia Prihatin’னை ஆழமாகப் புரிந்து கொள்ளுமாறு பிரதமர் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பரிவு காட்டுவது என்பது நாட்டின் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்க வேண்டிய பண்பு என தேசிய தினத்தையொட்டி Datuk Seri Ismail Sabri Yaakob குறிப்பிட்டார்.
இன்று புத்ராஜெயாவில் தேசிய தினம் புதிய வழமையில் மிதமான அளவில் கொண்டாடப்பட்டது.
தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் பிரதமர் மெய்நிகர் மூலம் தேசியத் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
நாட்டிலுள்ள பெரியவர்களில் 63.6 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.
83.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 3 கோடியே 44 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நேற்று ஒருநாளில் 3 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
சீனாவிடம் இருந்து 35 லட்சம் CanSino தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு கூறியிருக்கிறது.
நாட்டில் ஆறு மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த அத்தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பேரா, ஜொகூர், கெடா, திரங்கானு, கிளந்தான், சபா ஆகிய மாநிலங்களுக்கு அத்தடுப்பூசிகள் கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், அதனைச் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைப் பெற மருத்துவர்களுக்கு கையூட்டு வழங்கும் தரப்பினர் மீது விசாரணை நடத்துமாறு மலேசிய மருத்துவச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன் தொடர்பில் பொதுமக்கள் புகார் கொடுக்க ஏதுவாக சிறப்பு hotline சேவை ஏற்படுத்தப்பட வேண்டும் என MMA தலைவர் பேராசிரியர் Datuk Dr M Subramaniam வலியுறுத்தினார்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆதாரமாக இலக்கயியல் சான்றிதல் பெற மருத்துவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வரை கையூட்டு கொடுப்பது தொடர்பான புகார்கள் இதற்கு முன் கூறப்பட்டது.
Sungai Petaniயில் மருத்துவமனையொன்றில் கீழே விழுந்து மரணமடைந்த Covid-19 நோயாளி ஒருவர் கவனிக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை கெடா சுகாதாரத்துறை மறுத்துள்ளது.
அவரை கவனிப்பதில் மருத்துவப் பணியாளர்கள் மெத்தனம் காட்டியதாகவும் உடனடி சிகிச்சை வழங்கவில்லை எனவும் கூறப்படுவது உண்மையில்லை என அது தெரிவித்தது.
அச்சம்பவம் மீதான காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
பேராவில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வேலையில் இருந்த போது தாக்கப்பட்ட பாதுகாவலர் ஒருவரின் மரணம் கொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்திருக்கிறது.
கடந்தாண்டு டிசம்பரில் தாக்கப்பட்ட அப்பாதுகாவலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அது பலனளிக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather