← Back to list
"Dine-in": சுயச் சேவை முறையைப் பரிசீலிக்கின்றோம்- PRIMAS!
Aug 20, 2021
தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் உணவு விற்பனைத் தளங்களில் அமர்ந்து உணவு உண்ண வழங்கப்பட்ட தளர்வு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என, மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம், PRIMAS எதிர்ப்பார்க்கின்றது!
அக்கட்டத்தில் இருக்கும் KL, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி போட்டு முடித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம் என PRIMAS-சின் தலைவர் J சுரேஷ் கூறுகின்றார்.
இதற்கு முன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களுக்கு நகர்ந்த மாநிலங்களில் அத்தளர்வு வழங்கப்பட்ட போது, அதிகமானோர் உணவகங்களில் உணவருந்த தயக்கம் காட்டியதை அவர் சுட்டிக் காட்டினார்.
" இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் அந்த தயக்கம் இருந்தது. ஆனால் முதல் கட்ட மாநிலங்களில் தடுப்பூசி விகிதம் அதிகம் உள்ளது. அது அம்மாநிலங்களுக்கு ஒரு பலம். எனவே அதன் அடிப்படையில் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அதிக மக்கள் முன்வர வாய்ப்புள்ளது" என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள தளர்வுக்குப் பொது மக்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள ஏறக்குறைய ஒரு வாரமாவது ஆகும்;
அதற்கிடையில் வாடிக்கையாளர்களை வணிகத் தளங்களில் அனுமதிக்க உணவகங்கள் சில ஆயத்த வேலைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுரேஷ் சொன்னார்.
" தேவையான இட வசதி செய்து தர வேண்டியுள்ளது, SOP-களைப் பின்பற்ற ஏதுவான முன்னேற்பாடுகள் ஆகியவை இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் ஊழியர் பற்றாக்குறையில் உணவகங்கள் இருக்கின்றன. எனவே இந்த ஆயத்த வேலைகளும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதால், ஏறக்குறைய இன்னும் ஒரு வார காலகட்டத்தில் உணவகங்கள் முழுமையாக Dine-in சேவைக்குத் தயாராகிவிடும் என எதிர்ப்பாக்கலாம்".
கோவிட் 19 தொற்று விகிதம் குறைந்த பிறகு இத்தளர்வுகளை வழங்கலாம் எனக் கூறி காலம் கடத்தாமல், வணிகர்களின் நிலையைப் புரிந்து அரசாங்கம் வழங்கியுள்ள இத்தளர்வினை PRIMAS வரவேற்பதாக சுரேஷ் சொன்னார்.
என்றாலும் அதனை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வருவதற்கு, உணவகங்களில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறை மிகப்பெரிய சிக்கலாக அமைகின்றது என்கிறார் J சுரேஷ்.
"எங்களிடம் இருப்பவர்கள் பெரும்பாலும் அந்நிய தொழிலாளர்கள். அவர்களும் கடந்தாண்டிலிருந்து காத்திருந்து, பின்னர் வேலையில்லாத காரணத்தால் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.
இப்போது அவர்கள் திரும்ப முடியாத சூழல். இதற்கிடையில் அரசாங்கம் இந்த தளர்வை வழங்கியிருப்பதால் உணவக உரிமையாளர்கள் சற்று கலக்கத்தில் இருக்கின்றனர்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களிலும் கூட உணவகங்கள் இப்பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றன" என்றாரவர்.
சுயச்சேவை அதாவது " Self service" முறையை இதற்கு ஒரு தீர்வாகக் கொண்டு வர PRIMAS பரிசிலித்து வருவதாக சுரேஷ் கூறியுள்ளார்.
" இதன் தொடர்பில் சில அரசு அமைப்புகளிடம் பேசி வருகிறோம். தனியார் நிறுவனங்களும் ஆதரவு கொடுப்பது போல் தெரிகிறது. எனவே கூடிய விரைவில் இரு நட்செய்தியை எதிர்ப்பார்க்கலாம்", என்றா சுரேஷ்.
வாடிக்கையாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்யு அதே வேளை, ஊழியர் பற்றாக்குறை, நிதி நெருக்கடி என உணவக உரிமையாளர்கள் தரப்பிலுள்ள சிக்கல்களையும் ஒரேடியாகப் போக்கும் வழியாக இந்த சுயச் சேவை முறை அமையும் என்றாரவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather