Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாமன்னர் உத்தரவு!

Aug 18, 2021


மாமன்னர் உத்தரவு!

புதிதாக நியமிக்கப்படும் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் மக்களவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க வேண்டும் என மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.

அவர் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றவராக இருப்பது உறுதிச் செய்யப்படும் என அவர் கூறினார்.

அதே சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ஆதரவு கொடுக்கும் பிரதமர் வேட்பாளர்ரைக் குறிப்பிட்டு சமர்ப்பிக்கும் சத்தியப் பிரமாணங்களை நன்கு ஆராய்ந்து புதிய பிரதமர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப நியமிக்கப்படுவார் என்றும் Istana Negara வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், மாட்சிமை தங்கிய மாமன்னர் வரும் வெள்ளிக்கிழமை மலாய் ஆட்சியாளர்களுடன் சிறப்பு சந்திப்பு நடத்தவிருக்கிறார். 

நாட்டின் ஒன்பதாவது பிரதமர் நியமனம் குறித்து அச்சந்திப்பின் போது  பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னர் உத்தரவு!நாடு முழுவதும் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

மிக உயரிய தினசரி எண்ணிக்கையாக புதிதாக 22 ஆயிரத்து 242 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆறாயிரத்து 858 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அடுத்து சபாவில் மிக அதிகமாக ஈராயிரத்து 413 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கெடா, பினாங்கு, KL, ஜொகூர், கிளந்தான், சரவாக், பேரா ஆகியவற்றில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மாமன்னர் உத்தரவு!நாட்டில் இதுவரை 48.7 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட் 19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டு முடித்துள்ளனர். 

ஒட்டு மொத்தமாக இதுவரை 2 கோடியே 88 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

மாமன்னர் உத்தரவு!

இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டம் திட்டமிட்டபடி புத்ராஜெயாவில் உள்ள Pahlawan சதுக்கத்தில் நடைபெறும். 

எனினும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதில் பங்கேற்போர் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தொடர்பு, பல்லூடக அமைச்சு கூறியது.

மாமன்னர் உத்தரவு!நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை.

RON95 லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் 5 சென்னாகவும், RON97 லிட்டருக்கு இரண்டு ரிங்கிட் 74 சென்னாகவும் டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாகவும் நிலை நிறுத்தப்படுகிறது.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather