← Back to list
Booster Shot ஆராயப்படுகிறது!
Aug 08, 2021
Booster shot எனப்படும் மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுது குறித்து ஆராய்ந்து வரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று.
பரவி வரும் உருமாரிய Delta வகை கிருமி தொற்றுக்கு மத்தியில் அந்த மூன்றாவது தடுப்பூசியின் அவசியம் குறித்து ஆராயப்படுவதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Adham Baba தெரிவிததுள்ளார்.
அது குறித்து தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin கூடிய விரைவில் அறிவிப்பார் என அவர் கூறினார்.
----
கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று மட்டும் நாட்டில் நான்கு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அவர்களில் 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டு முடித்துள்ளனர்.
நாட்டு மொத்த மக்கள் தொகையில் 66 விழுக்காட்டுப் பெரியவர்கள் முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
----
பொருளாதாரத் துறைகள் மீண்டும் செயல்பட அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு வருகின்றது!
அது குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக The Star தகவல் கூறுகின்றது.
எனினும் வணிகங்கள் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு தளர்வு வழங்குவதற்கு முன்பு, அவற்றில் கோவிட் 19-னால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து நன்கு ஆராயப்பட வேண்டு என தேசிய மீட்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Tengku Datuk Seri Zafrul Aziz தெரிவித்துள்ளார்.
-----
பஹாங்கில் உள்ள மருந்தகம் ஒன்றில் அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தின் கோவிட் 19 சுய பரிசோதனை கருவி விற்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அச்சம்பவம் மேல்நடவடிக்காக அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிகபயனீட்டாளர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அக்கருவியை வாங்கும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
----
நாளை தொடங்கி மலேசியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் தங்களின் வாகனமோட்டும் உரிமத்தையும் சாலை வரியையும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனினும் நெரிசலைத் தவிர்க்க பொது மக்கள் இன்றே தங்களின் அகப்பக்கம் அல்லது செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என Pos Malaysia தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather