← Back to list
கோவிட்-19: 20 ஆயிரத்தைக் கடந்தது!
Aug 05, 2021

நாட்டில் புதிதாகப் பதிவாகிய கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்து விட்டது!
இன்று புதிதாக 20 ஆயிரத்து 596 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
சிலாங்கூரில் ஆக அதிகமாக எண்ணாயிரத்து 549 சம்பவங்களும், KLலில் ஈராயிரத்து 163 சம்பவங்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
சபா, கெடா, ஜொகூர் மற்றும் பினாங்கில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
----
கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகளில் தினசரி ஆயிரத்துக்கு அதிகமானோர் கோவிட் 19 சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர்.
கடந்த இரு வாரங்களோடு ஒப்பிடுகையில், சிலாங்கூர், KL மற்றும் Putrajayaவிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 விழுக்காடு உயர்ந்திருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah Facebook-கில் குறிப்பிட்டுள்ளார்.
-----
கோவிட் 19-னுக்கான தடுப்பூசியை முழுமையாகப் போட்டு முடித்தவர்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதிப்பது மீதான முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும்!
உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணுதல் உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளை உட்படுத்திய தர செயல்பாட்டு நடைமுறைகளுக்கான தளர்வுகள் குறித்தும் அதே காலகட்டத்தில் முடிவு செய்யப்படும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்துள்ளார்.
எனினும் தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் எல்லா அளவுகோள்களையும் நாடு இன்னும் அடையவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம் என பிரதமர் நினைவுறுத்தினார்.
----
இம்மாத மத்தி அல்லது அடுத்த மாதம் வாக்கில் சரவாக் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அம்மாநிலத்தில் 84 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டு நிலையில், கூடிய விரைவில் அவ்விலக்கை அடைய முடியும் என தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.
-----
இதனிடையே தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்குள் நுழைந்துவிட்ட இடங்களுக்கு மட்டுமே, மற்றவர்களுடன் தொடர்பு இல்லாத எல்லா விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என, இளைஞர் விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
எனவே விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கிவிட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி பொய்யானது என்பதை அவ்வமைச்சு தெளிவுப்படுத்தியிருக்கின்றது.
-----
அமைச்சர் நிலையில் பிரதமரின் சிறப்பு ஆலோசகராக BERSATU கட்சியின் துணை தலைவர் Datuk Seri Ahmad Faizal Azumu நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக பணிகள், தொடர்பு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு விவகாரங்களில் அவர் பிரதமருக்கு ஆலோசனை வழங்குவார் என பிரதமர் அலுவலகம் அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
-----
கடந்த திங்கட்கிமை Merdeka சதுக்கத்தில் பேரணி நடத்தப்பட்டது தொடர்பில் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுவிட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather