← Back to list
Datuk Seri Shamsul அமைச்சர் பதிவியிலிருந்து விலகினார்!
Aug 03, 2021
எரிசக்தி இயற்கை வள அமைச்சர் Datuk Seri Dr Shamsul Anuar Nasarah பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
UMNO உறுப்பினரான தாம், கட்சி எடுத்திருக்கும் முடிவு மற்றும் அதன் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு தாம் இம்முடிவை எடுத்திருப்பதாக, அவர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.
-----
கோவிட் 19 சுய பரிசோதனை கருவியை விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்க்க உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
நடப்பில் 39 ரிங்கிட் 90 சென்னுக்கு விற்கப்படும் அக்கருவிகள் மக்களுக்கு சுமையாக விளங்கக் கூடும் என துணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே பொது மக்களுக்கு எளிதில் அக்கருவிகள் கிடைப்பதை உறுதிச் செய்ய அதனை விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக அறிவிக்க KPDNHEP பரிந்துரைத்தாக அவர் சொன்னார்.
இது குறித்து சுகாதார அமைச்சு, விநியோகிப்பாளர்கள், வணிகர்கள் ஆகியோரிடன் கலந்து பேசவிருப்பதாகச் சொன்னது.
-----
நாட்டில் புதிதாகப் பதிவாகிய கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் 17 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இன்று புதிதாக 17 ஆயிரத்து 105 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்றும் சிலாங்கூரில் ஆக அதிகமாக ஐயாயிரத்து 836 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
-----
கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்று தொடங்கிய Walk in முறையிலான தடுப்பூசி திட்டம் சுமூகமாகச் சென்று கொண்டிருப்பதாக தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaludin தெரிவித்துள்ளார்.
எனினும் Serendahவில் அமைந்து ஒரு மையத்தில் மட்டும் அதிகமானோர் வந்திருந்ததால், தடுப்பூசி கையிருப்பு பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-----
உருமாரிய Delta வகை கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக சரவாக்கில் கடுமையாக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.
நாளை தொடங்கி அம்மாநிலம் தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்குள் நுழைந்தாலும், அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது அவசியம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
------
கிளாந்தானில் இன்னும் இரு வாரங்களில் கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை குறையும் என மாநில அரசு எதிர்ப்பார்க்கின்றது.
இம்மாத இறுதிக்குள் அம்மாநிலத்தில் 40 விழுக்காடு கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடைய இலக்கு வைக்கப்பட்டிருப்பதால், தொற்று பரவல் எண்ணிக்கை குறையும் என தாங்கள் நம்புவதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather