Now Playing

Harish Raghavendra, Vijay, Richa

Melliname

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

Kalakkal kaalai

You Asked! We Listened! Everything is new on the Kalakkal Kaalai plate! Kickstarts your weekday mornings with our sassy pair, Uthaya and Vikadakavi from 6 am to 10 am.

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

Melliname

Harish Raghavendra, Vijay, Richa

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Kalakkal kaalai Current Show

Kalakkal kaalai

You Asked! We Listened! Everything is new on the Kalakkal Kaalai plate! Kickstarts your weekday mornings with our sassy pair, Uthaya and Vikadakavi from 6 am to 10 am.

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

எதிர்க்கட்சி MPக்களின் முயற்சி கைகூடவில்லை!

Aug 02, 2021


எதிர்க்கட்சி mpக்களின் முயற்சி கைகூடவில்லை!

இன்று காலை நாடாளுமன்றத்தினுள் நுழையும் எதிர்க்கட்சி MPக்களின் முயற்சி கைகூடவில்லை.

நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான அனுமதி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் Datuk Seri Anwar Ibrahimமுக்கும் அதிகாரத் தரப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து அவர்கள் கலைந்து செல்ல வேண்டியதாயிற்று.

முன்னதாக தத்தம் தலைவர்கள் தலைமையிலான எதிர்க்கட்சி MPக்கள் மெர்டெக்கா சதுக்கத்தில் ஒன்று கூடினர்.

முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad, AMANAH தலைவர் Mohd Sabu, DAP தலைவர் Lim Guan Eng, WARISAN தலைவர் Datuk Seri Mohd Shafie Apdal ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

இன்று காலை தொடங்கி நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

இன்று கடைசி நாளாக நடைபெறவிருந்த மக்களவை சிறப்பு அமர்வுர், நாடாளுமன்றத்தில் உறுதிச் செய்யப்பட்ட கொரோனா சம்பவங்கள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

அதே சமயம் நாளை தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த மேலவை சிறப்பு அமர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் சுகாதாரத் தரவுகளின் அடிப்படையிலேயே மக்களவை சிறப்பு அமர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

அது அரசியல் நோக்கிலானது அல்ல என முன்னதாக துணைப் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob விளக்கமளித்திருந்தார்.

எதிர்க்கட்சி mpக்களின் முயற்சி கைகூடவில்லை!

நாடு முழுவதும் இதுவரை 2 கோடியே 12 லட்சத்துக்கும் அதிகமான Covid-19 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

கிட்டதட்ட 70 லட்சம் பேர் முழுமையாக இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்.

மொத்த மக்கள் தொகையில் அவ்வெண்ணிக்கை 21.3 விழுக்காடாகும்.

ஒரு கோடியே 42 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி mpக்களின் முயற்சி கைகூடவில்லை!

மற்றொரு நிலவரத்தில், நேற்று நாடு முழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக இரு டோஸ்களையும் போட்டு முடித்தனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் இன்று பிற்பகல் 2 மணி தொடங்கி நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ‘walk-in’ முறையிலான சேவை  தொடங்குகிறது.

40 வயதுக்கு மேற்பட்டவர்களும் பல்வேறு உடல் உபாதைகளைக் கொண்டவர்களும் இன்று தொடங்கி புதன்கிழமை வரை தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி பெறலாம்.

ஆகஸ்ட் 5ந்தில் இருந்து 22 ஆம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறு செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி mpக்களின் முயற்சி கைகூடவில்லை!ரத்ததானம் செய்ய முன் வருமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ரத்ததான நடவடிக்கைகளின் நடைமுறைகள் மீது அச்சம் கொண்டு பொதுமக்கள் ரத்ததானம் செய்வது அண்மைய காலமாக குறைந்து வருகிறது.

அதோடு ஏற்பாட்டாளர்கள் ரத்த தான முகாம்களை ரத்து செய்வதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.

இதனிடையே ரத்த தான நடவடிக்கை நடைமுறைகள், ரத்ததானம் செய்ய வருவோர், ரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் முன்னிறுத்தியிருக்கும் என அமைச்சு மறு உத்தரவாதம் வழங்கியது.

எதிர்க்கட்சி mpக்களின் முயற்சி கைகூடவில்லை!சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan, இருதய அறுவை சிகிச்சைக்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கூறுகிறது.

அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அந்த Kota Baru MP நாளை வீடு திரும்ப அனுமதிக்கப்படலாம் எனவும் Utusan Malaysia செய்தி வெளியிட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us