← Back to list
காணொளி உண்மையானது அல்ல!
Jul 22, 2021
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
புதிதாக 13 ஆயிரத்து 34 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆறாயிரத்து 49 என மிக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து கோலாலம்பூரில் மிக அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் 134 பேர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
Covid-19 தடுப்பூசியின் முழுமையான இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள காணொளி உண்மையானது அல்ல.
கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான உண்மையான காணொளியின் பெரும்பகுதிகள் அகற்றப்பட்டு வெளியாகியுள்ள காட்சிகள் அவை என சுகாதார அமைச்சு விளக்கியது.
உண்மையான தகவல்களுக்கு சுகாதார அமைச்சை நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை சுமார் 50 லட்சம் பேருக்கு முழுமையாக இரு டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
ஒரு கோடியே 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதலாவது டோசைப் பெற்றுள்ளனர்.
பெரியவர்களில் 21.1 விழுக்காட்டினர் இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களுக்கான Covid-19 தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது.
அதன் கீழ் பினாங்கிலும் ஜொகூரிலும் 55 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக பொதுப்பணி அமைச்சு கூறியது.
இணையம் வாயிலான Covid-19 தடுப்பூசி விற்பனை மோசடி குறித்து கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
54 ஆயிரத்து 500 ரிங்கிட்டை உட்படுத்திய Covid-19 தடுப்பூசி விற்பனை மோசடி தொடர்பில் தங்களுக்கு இதுவரை 38 புகார்கள் கிடைத்திருப்பதைச் சுட்டிக் காட்டி Bukit Aman அவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.
நாட்டில் அதீத வெப்ப நிலை இதுவரை இல்லை.
இருப்பினும் தென் மேற்கு பருவத்தால் தற்போது காணப்படும் வெயிலும் வறண்ட நிலையும் செப்டம்பர் மாத மத்தி வரை தொடரும் என வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather