Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

குற்றச்சாட்டை மறுத்தார் Syed Saddiq!

Jul 22, 2021


BERSATU கட்சியின் இளையோர் அணி ARMADAவுக்குச் சொந்தமான 10 லட்சம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக KL Sessions நீதிமன்றத்தில் தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை Muar நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq மறுத்துள்ளார்.

குற்றச்சாட்டை மறுத்தார் syed saddiq!

ARMADA தலைவர் பதவியில் இருந்த போது அவர் அக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அதனை மறுத்த அவர், மறுவிசாரணைக்கு கோரினார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் போகாத சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

 

MP-களுக்கு தடை விதிக்கப்படாது!

இன்னும் COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாத MPகளும், அடுத்த வார நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் பங்கேற்கலாம்!

நாடாளுமன்றத்திற்குள் நுழைய அவர்களுக்கு தடை விதிக்கப்படாது என மக்களவை சபாநாயகர் Datuk Azhar Azizan தெரிவித்துள்ளார்.

இதுவரை 95 விழுக்காட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசிப் போட்டு விட்டதாக அவர் கூறினார்.

 

4 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்!

குற்றச்சாட்டை மறுத்தார் syed saddiq!

நேற்று ஒரு நாளில், நாட்டில் 4 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அவர்களில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2ஆம் டோஸ் போட்டுக் கொண்டனர்.

இதையடுத்து நாட்டில் இதுவரை 15 புள்ளி 5 மில்லியன் டோஸ்  கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

 

SOPகளை தளர்த்தும் முடிவை MKN அறிவிக்கும்!

COVID-19 தொற்றுக்கு எதிரான இரு தடுப்பூசிகளையும் முழுமையாக போட்டு முடித்தவர்களுக்கான SOPகளை தளர்த்துவதற்கு முன், சில முக்கிய அம்சங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

அண்டை நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள், மருத்துவ நிபுணர்களின் கருத்துகள் அறியவியல் தரவுகள்  அதிலடங்கும் என, துணைப் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறியுள்ளார்.

குற்றச்சாட்டை மறுத்தார் syed saddiq!

தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு, COVID-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிச் செய்ய, இத்தகைய ஆய்வுகள் அவசியமாவதாக அவர் சொன்னார்.

SOPகளை தளர்த்தும் எந்தவொரு முடிவானாலும், அதனை தேசிய பாதுகாப்பு மன்றம் தான் இறுதிச் செய்யும் என்றும் Datuk Seri Ismail Sabri கூறினார்.

உதாரணத்திற்கு, கொரோனா சீற்றம் கருதி, மாவட்ட மற்றும் மாநில எல்லைகளை கடப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இரு டோஸ் தடுப்பூசிகளை போட்டு முடித்தவர்களுக்கு அதில் விலக்கு அளிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கலாம்

குறிப்பாக, ஒருவரை ஒருவர் பிரிந்து தூரத்தில் வாழும் கணவனும், மனைவியும், முழுமையான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விட்ட பட்சத்தில் அவர்களுக்கு பயணத் தளர்வு வழங்கப்படலாம் என Datuk Seri Ismail Sabri கோடி காட்டினார்.

 

தொழிற்சாலைகள் - நிறுவங்களை மீண்டும் திறப்பது பற்றி பரிசீலனை!

80 விழுக்காட்டு ஊழியர்கள் COVID-19 தடுப்பூசிக்கான இரு டோஸ்களையும் போட்டு முடித்திருந்தால்சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படலாம்!

குற்றச்சாட்டை மறுத்தார் syed saddiq!

அதற்கான சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது; முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என துணைப் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.

 தொழில் துறைகள் மீண்டும் வழக்கம் போல் செயல்படுவதை அனுமதிக்க சில கூடுதல் நிபந்தனைகளும் உண்டு என Datuk Seri Ismail Sabri சொன்னார்.

அதில் ஒன்று தான், நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள், அவ்வப்போது தங்களது பணியிடங்களில் கொரோனா தொற்று மீதான பரிசோதனைகளை நடத்துவது என அவர் கூறினார்.

 

அதிக மரணங்கள்!

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 199 பேர் COVID-19 தொற்றுக்கு பலியாகினர்.

அதில் ஆக அதிகமாக 84 மரணங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.

இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 440-ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது தொள்ளாயிரத்து 27 பேர் ICU சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர்.

நேற்று 11 ஆயிரத்து தொள்ளாயிரத்து 85 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.

குற்றச்சாட்டை மறுத்தார் syed saddiq!

இதனிடையே, நேற்று புதிதாக 30 COVID-19 clusterகளும் உருவாகின.

அதில் 8 clusterகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவற்றையும் சேர்த்து, நாட்டில் மொத்தமாக தொள்ளாயிரத்து 31 clusterகள் இன்னும் தீவிரமாக இருக்கின்றன.

 

Sungai Buloh மருத்துவமனை இறுதிச் சடங்கிற்கான கட்டணம் விதிக்கவில்லை!

Sungai Buloh மருத்துவமனையில், COVID-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் பிரேதங்களை கையாண்டு இறுதிச் சடங்கை நடத்த, 9 ஆயிரம் ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கப்படுவதாக பரவியுள்ள தகவலை, அம்மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

கொரோனா தொற்றாக இருந்தாலும் சரி அல்லது வேறு காரணங்களுக்காக  உயிரிழந்தவராக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்டவரின் சடலத்தை வார்ட்டில் இருந்து, பிரேத அறைக்கு கொண்டு வந்து கிடத்துவது வரை மட்டுமே தடயவியல் துறை செயல்படும்.

இறுதிச் சடங்கு உள்ளிட்ட இதர தேவைகள், அதற்கான செலவினங்கள் ஆகியவை சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாரைப் பொறுத்தது என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

 

பதற்றத்தினால் வரும் தூக்கமின்மை பிரச்னை!

COVID-19 சீற்றத்தினால் ஏற்படும் பதற்றம், நீண்ட காலமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகிய காரணங்களினால், மலேசியர்கள் தூக்கமின்மை பிரச்னையை எதிர்நோக்கியிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த தூக்கமின்மை பிரச்னை களையப்பட வேண்டும்; இல்லை என்றால், அது அளவுக்கு மீறிய சோர்வையும், உடல் எடை அதிகரிப்பு, தூக்கத்தில் மூச்சுத் திணறல் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வந்து விடும் என அவர்கள் Malaysian Insightடிடம் கூறியுள்ளனர்.

 

Delta வகை கிருமியின் ஆதிக்கம் அதிகரிக்கும் : WHO தகவல்!

வரக்கூடிய மாதங்களில், அதிக வீரியமுள்ள டெல்தா வகை கொரோனா கிருமியின் ஆதிக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் WHO கூறியிருக்கின்றது.

முதன் முறையாக இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட இந்த டெல்தா வகை கொரோனா கிருமி, தற்போது 124 நாடுகளுக்கு பரவியிருக்கின்றது.

இதர மூன்று வகை கொரோனா கிருமிகளை காட்டிலும் இந்த டெல்தா வகை கிருமிப் பரவம் அதிவேகமாக இருப்பதையும் WHO குறிப்பிட்டது.

 

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் அதிகமானோர் மரணம்!

இந்தியாவில், கொரோனா சீற்றம் ஒரு பக்கம் இருக்க, கடந்த இரு மாதங்களில் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கருப்பு பூஞ்சை நோய் காரணமாக, இந்தியாவில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துளனர்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather