← Back to list
MITI கடிதத்தைப் பயன்படுத்த முடியாது!
Jul 18, 2021
Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
பெரியவர்களில் கிட்டதட்ட 19 விழுக்காட்டினர் முழுமையாக இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்.
41 விழுக்காட்டினர் முதல் டோசைப் பெற்றுள்ளனர்.
இவ்வேளையில் நேற்று ஒரு நாளில் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டன.
நாட்டிலுள்ள மேலும் 12 பல்கலைக்கழகங்கள் கூடிய விரைவில் தடுப்பூசி மையங்களாக மாற்றப்படவுள்ளன.
தேசிய தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு கூறியது.
தற்போது நாடு முழுவதும் 29 பல்கலைக்கழகங்கள் தடுப்பூசி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன.
நாட்டிலுள்ள ஆசிரியர்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோசாவது போடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்படம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து பள்ளிகள் கட்டங் கட்டமாகத் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கற்றல்-கற்பித்தல் இணையம் வழி தொடரும்.
இன்று முதல் புதன்கிழமை வரை அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சின் அனுமதி கடிதத்தைப் பயன்படுத்தி மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க முடியாது என தேசிய காவல் படைத் தலைவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் ஹஜ் பெருநாளையொட்டி சொந்த ஊர்களுக்குத் திரும்ப பொதுமக்கள் அக்கடிதத்தைப் பயன்படுத்தலாம் என அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும் ஆபத்து, அவசர வேளை, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தடையில்லை என அவர் சொன்னார்.
ஹஜ் பெருநாளின் போது தர செயல்பாட்டு நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருமாறு சுகாதார தலைமை இயக்குனர் அனைவருக்கும் நினைவுறுத்தியிருக்கிறார்.
கடந்த காலங்களில் கொண்டாட்டங்களால் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது போன்று மீண்டும் நிகழக்கூடாது.
மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க விதிக்கப்பட்டுள்ள தடை இன்னும் அமலில் இருப்பதால், பிறர் வீடுகளுக்குச் செல்ல யாருக்கும் அனுமதியில்லை என்றாரவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather