← Back to list
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முன்னோடித் திட்டம்!
Jul 15, 2021
நாட்டில் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை, அக்டோபர் மாத தொடக்கத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது!
சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டு முடித்தவர்களை உட்படுத்தி, ஒரு நாளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் என்ற கணக்கில், அவர்களுக்கான 2ஆம் டோஸ் தடுப்பூசியையும் போட்டு முடிப்பதன் வாயிலாக, அந்த இலக்கை அடைய முடியும் என்றும் அவர் விவரித்தார்.
"Kalau kita lihat pula kalau unjuran kita atau purata keberkesanan adalah 80 peratus dan kita boleh laksanakan 150 ribu vaksinasi sehari untuk dos kedua, dan kita menjangkakan pada bulan 10 kita boleh turunkan kes kurang daripada seribu"
நாட்டில் தற்போது 8 புள்ளி 6 மில்லியன் பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
PPV-களுக்கு நேரடியாகச் செல்லலாம்!
இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
எனினும், முதல் கட்டமாக சிலங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Adham Baba தெரிவித்துள்ளார்.
அந்த முன்னோடித் திட்டம் பிற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றாரவர்.
இரு டோஸ் போட்டவர்களுக்கு தளர்வுகள் - பரிசீலிக்கப்படுகிறது!
இரு டோஸ் தடுப்பூசிகளை போட்டு முடித்தவர்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக, பிரதமர் தெரிவித்துள்ளார்.
பயணத் தளர்வும் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிப்பதும் அதிலடங்கும் என Tan Sri Muhyiddin Yassin கூறினார்.
இதன் வழி, மக்கள் மெல்ல தொற்றுக்கு முந்தைய பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், மக்கள் அனைவரும் பொறுமைக் காத்து அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் Tan Sri Muhyiddin கேட்டுக் கொண்டார்.
இன்று 13 ஆயிரத்திற்கும் அதிகமான சம்பவங்கள்!
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 13 ஆயிரத்து 215 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் ஆக அதிகமாக ஆறாயிரத்து 120 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
அதற்கடுத்த நிலையில் ஆயிரத்து 603 சம்பவங்களுடன் நெகிரி செம்பிலான் உள்ளது.
110 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather