← Back to list
STPM மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இம்மாதம் தொடங்கும்!
Jul 14, 2021
STPM மாணவர்களுக்கு COVID-19 தடுப்பூசி போடும் பணிகள் இம்மாதம் தொடங்கும்.
எனினும், SPM தேர்வெழுதும் மாணவர்களுக்கு இப்போதைக்கு தடுப்பூசி போடப்படாது என, சுகாதார அமைச்சர், Utusan Malaysiaவிடம் தெரிவித்துள்ளார்.
17 மற்றும் அதற்கும் கீழ்பட்ட வயதுடையவர்களுக்கு, இரு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, உடலில் சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதே அதற்கு காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரிய சில சம்பவங்களை மட்டுமே அது உட்படுத்தக்கூடும் என்றாலும், அவ்வயதினருக்கு தடுப்பூசி போட முடிவெடுக்கும் முன்னர், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து வரும் தரவுகளுக்காக அமைச்சு காத்திருப்பதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு ஏறக்குறைய 4 லட்சம் SPM மற்றும் STPM மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர்.
மற்றொரு நிலவரத்தில், நாடு முழுவதும் இதுவரை 12 புள்ளி 2 மில்லியன் COVID-19 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
நேற்று ஒரு நாள் மட்டும், 4 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
அது ஒரு நாளில் பதிவான மிக உயரிய எண்ணிக்கையாகும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் குறைந்துள்ளது!
நாடு முழுவதும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் குறைந்துள்ளதாக, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் COVID-19 தடுப்பூசி போட்டு விட்டதே அதற்கு காரணம் என்றாரவர்.
இந்நிலை தொடர வேண்டும் என கூறிய அவர், ஒருவேளை, தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மிதமான அறிகுறிகள் தென்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள், வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறினார்.
தடுப்பூசிக்கு பிந்தைய கொரோனா தொற்றின் விளைவுகள் மோசமாக இருக்காது என அவர் விளக்கினார்.
உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,
தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவருக்கு ஒருவேளை கிருமித் தொற்றினால் அவரிடம் இருந்து மற்றவருக்கு அத்தொற்று பரவக்கூடிய வாய்ப்பு வெறும் 50 விழுக்காடு தான் இருக்கும் என்பதையும் Dr Noor Hisham சுட்டிக் காட்டினார்.
எனவே, இன்னும் தடுப்பூசிக்கு பதியாதவர்கள், விரைந்துப் பதிந்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
மற்றொரு நிலவரத்தில், இன்னும் ஓரிரு வாரங்களுக்கு COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றும் Dr Noor Hisham கூறியுள்ளார்.
எளிதில் பரவக்கூடிய Delta வகை தொற்றுகள் அதிகரித்துள்ளதே அதற்கு காரணம் என்றாரவர்.
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று 11 ஆயிரத்து 79 கொரோனா சம்பவங்கள் பதிவாகின.
அதில் ஐயாயிரத்து 263 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
நேற்று 125 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.
அதில், பிறந்து 38 வாரங்களே ஆன குழந்தையும் அடங்கும்.
COVID-19 போராட்டத்திற்கு எதிரான முயற்சிகள் தொடரும்!
கிள்ளான் பள்ளத்தாக்கில் COVID-19 சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என Tan Sri Muhyiddin Yassin சொன்னார்.
இதுவரைக்குமான நிலவரப்படி, தடுப்பூசி போடும் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருவது குறித்து அவர் மனநிறைவும் தெரிவித்தார்.
தடுப்பூசி பணிகள் அதிகரிக்கும் போது, கொரோனா சம்பவங்களை குறைக்க முடியும் என Tan Sri Muhyiddin சொன்னார்.
மேலும் பேசிய அவர், சுகாதார துறை துணை தலைமை இயக்குநர் தலைமையிலான, Greater Klang Valley சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்கவும் தாம் உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறினார்.
அந்தப் பணிக்குழு, கிள்ளான் பள்ளத்தாக்கில் கொரோனா நிலவரத்தை கட்டுப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை மேற்கொள்ளும் என்றாரவர்.
இவ்வேளையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
சிலாங்கூர் கிள்ளானில் உள்ள Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு சிறப்பு வருகை மேற்கொண்ட போது பிரதமர் இத்தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவு 'காலியாக்கப்பட்டதா"? - HTAR விளக்கம்!
நேற்று பிரதமர் Tan Sri Muhyiddin Yassinனின் வருகைக்கு முன்பாக, கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு காலியாக்கப்பட்டதாக கூறப்படும் தகவலை அதன் நிர்வாகம் மறுத்துள்ளது.
மருத்துவமனை நோயாளிகள் நிறைந்து தான் காணப்படுகிறது; அதில் மறைக்க ஒன்றுமில்லை.
இந்நிலையில் நோயாளிகளை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து மற்றொரு வார்ட்டுக்கு மாற்றும் நடவடிக்கை, எதிர்பாரா நிகழ்வுகளுக்கான மருத்துவமனையின் மாற்றுத் திட்டக் குழு ஏற்கனவே செய்த முடிவு தான் அந்நிர்வாகம் விளக்கம் அளித்தது.
மருத்துவமனையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது என்பதை காட்டுவதற்காக, அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகள், வேறொரு பிரிவுக்கு மாற்றப்பட்டதாக சமூக வலைத்தலங்களில் முன்னதாக செய்திகள் பரவின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather