← Back to list
தடுப்பூசி மையத்தில் 204 பேருக்கு COVID-19 தொற்று!
Jul 13, 2021
Shah Alam IDCC தடுப்பூசி மையத்தைச் சேர்ந்த 204 பணியாளர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
இதையடுத்து, அம்மையம் இன்று ஒருநாள் துப்புரவு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
அம்மையம் மீண்டும் திறக்கப்பட்டதும் அங்கு வரும் பொது மக்கள் நிர்ணயிக்கப்பட்ட SOPகளை எல்லா நேரமும் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.
அதாவது, குறித்த நேரத்தில் மட்டுமே தடுப்பூசி மையத்திற்குச் செல்வது, தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்ததும் உடனடியாக மையத்தை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட SOPகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
IDCC தவிர்த்து, நாட்டிலுள்ள இதர தடுப்பூசி மையங்களும் இந்த SOPகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என Khairy வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர் ஜூலை 9, 10, 11, 12ஆம் தேதிகளில் IDCC தடுப்பூசி மையத்திற்குச் சென்றவர்கள், அந்த தேதியில் இருந்து 10 நாட்களுக்கு தங்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்காணிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் கொரோனாப் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட முதல் தடுப்பூசி மையமாக IDCC Shah Alam விளங்குகிறது.
Covid-19 "risk status" சரிப்பார்க்க தவறாதீர்கள்!
தடுப்பூசி மையங்கள் உட்பட எங்குச் செல்வதானாலும், MySejahtera செயலில் உள்ள COVID-19 ஆபத்து குறியீடு risk status-சை ஒருமுறை சரிபார்க்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
COVID-19 தொற்றுக் கண்ட ஒருவர், சிலாங்கூரில் உள்ள தடுப்பூசி மையத்திற்குள் நுழைந்த சம்பவத்தை அடுத்து, தடுப்பூசி செயற்குழு இந்த ஆலோசனையை வழங்கியிருக்கிறது.
COVID-19 தடுப்பூசி: புதிய உச்சம்!
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 479 COVID-19 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.
அதில், 2 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் அதிகமானவை முதல் டோஸ்.
ஒரு லட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 2ஆம் டோசைப் போட்டு முடித்தனர்.
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா சம்பவங்கள்!
தமிழகத்தில் கடந்த 52 நாட்களாக தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
ஆகக் கடைசியாக தமிழகத்தில் ஈராயிரத்து 652 சம்பவங்கள் பதிவாகின.
36 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.
மூவாயிரத்து 104 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather