← Back to list
Ismail Sabri துணைப்பிரதமராக நியமனம்!
Jul 07, 2021

Datuk Seri Ismail Sabri Yaakob துணைபிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்!
தற்காப்பு அமைச்சராகவும் தொடர்ந்து பொறுப்பு வகிக்கும் அவரது நியமனம் உடனடி அமுலுக்கு வருவதாக, பிரதமர் அலுவலகம் சற்று முன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வேளையில் வெளியுறவு அமைச்சரான Datuk Seri Hishammuddin Hussein மூத்த அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
------
நாட்டில் இன்று இரண்டாவது நாளாக கோவிட் 19 தொற்று எண்ணிக்கை ஏழாயிரத்தைக் கடந்துள்ளது!
இன்று புதிதாக ஏழாயிரத்து 97 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையாக மூவாயிரத்து 100 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
KL, நெகிரி செம்பிலான், மலாக்கா, சரவாக் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
----
தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குச் சென்றுள்ள மாநிலங்களில் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்குவது பற்றி தேசிய பாதுகாப்பு மன்றம் பரிசிலிக்க வேண்டும்!
உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு அவ்வாறு கேட்டு கொண்டுள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர்களின் ஆலோசனையின் பேரில் அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக KPDNHEP தெரிவித்தது.
-----
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான Moratorium சலுகைக்குப் பொது மக்கள் இன்று தொடங்கி விண்ணப்பிக்கலாம்!
இணையத்தள படிவம், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பின் மூலம் அச்சலுகைக்கு விண்ணப்பிக்கலாம் என Bank Negara தெரிவித்துள்ளது.
ஆதரவு ஆவணங்கள் தேவையில்லை; விண்ணப்பங்கள் நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என அது தெரிவித்தது.
-----
இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு வாரத்திற்கு RON97 ரக பெட்ரோல் விலை ஒரு சென் உயர்ந்து, 2 ரிங்கிட் 70 சென்னுக்கு விற்கப்படும்.
RON95 மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை; அவை முறையே 2 ரிங்கிட் ஐந்து சென்னுக்கும், இரண்டு ரிங்கிட் 15 சென்னுக்கும் விற்கப்படும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather