Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்த்துள்ளது!

Jun 29, 2021


 

COVID-19 சீற்றத்தினால், வாழ்வும் - வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரலுக்கு செவி சாய்க்கும் விதமாக, 150 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான PEMULIH எனும் மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சித் திட்டம் அமைந்திருப்பதாக, பொருளாதார வல்லுநர் Dato Dr Madeline Berma கருதுகின்றார்.

“So bagi saya ini adalah pakej dimana sedikit sebanyak Kerajaan khususnya yang amat berhormat Perdana Menteri betul-betul menunjukkan yang  beliau mendengar keluhan dan resah gelisah rakyat Malaysia akibat daripada pelanjutan PKP ini. Maknya bantuan yang telah diberikan itu berupaya untuk melindungi kehidupan dan juga perniagaan” 

நாடு எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டிருப்பது B40 தரப்பினர் மட்டும் அல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்திருப்பதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin முன்னதாக கூறியிருந்தார்.

மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்த்துள்ளது!

அதனால் தான் இம்முறை, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய உதவிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், B40, M40, T20 என அனைத்து தரப்பினருக்கும், வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்க, இயல்பாகவே ஆறு மாதங்களுக்கு moratorium சலுகை வழங்கப்படுவதாக அறிவித்தார்.

"isi rumah kategori miskin tegar bakal menerima bantuan sebanyak 500 ringgit pada bulan Ogos, 500 ringgit pada bulan November, dan 300 ringgit pada bulan Disember. Manakala individu bujang kategori miskin tegar akan menerima bantuan sebanyak 200 ringgit pada bulan Ogos dan 300 ringgit pada bulan November"

ஜூலை 7 ஆம் தேதி முதல் அந்த moratorium சலுகைக்கு  விண்ணப்பிக்கலாம்.

இவ்வேளையில், ஊழியர் சேமநிதி வாரியம் EPF-பின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள i-Citra திட்டம் வழி, சந்தாதாரர்கள், மாதத்திற்கு ஆயிரம் ரிங்கிட் என்ற கணக்கில், ஐயாயிரம் ரிங்கிட் வரை பணத்தை மீட்கலாம்.

மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்த்துள்ளது!

அதன் தொடர்பான தகவல்களை பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்தார்.

“ahli boleh mula memohon kemudahan pengeluaran KWSP di portal dalam talian i-citra, di i-citra KWSP mulai 15 Julai. Dengan pembayaran pertama pada August 2021.”

அத்திட்டத்தின் கீழ் பணத்தை மீட்க, ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி சந்தாதாரர்கள் இணையம் வழி விண்ணப்பிக்கலாம்.

முதல் தொகை ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.

 PEMULIH திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இதரச் சலுகைகள்:

  • PTPTN-னிடம் இருந்து கடன் வாங்கியவர்களுக்கு 3 மாதங்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட moratorium வழங்கப்படும்.

  • இவ்வாண்டில் வருமானம் இழந்தவர்கள், ஊழியர் சேமநிதி வாரியம், SOCSO ஆகிய தரவுகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 500 ரிங்கிட் உதவிப் பெறுவார்கள்.

  • COVID-19 சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது தொகுதி மக்களுக்கு உணவுக் கூடை உதவிகளை வழங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 3 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்படுகிறது.

  • சம்பளத் உதவித் தொகை திட்டம் 4.0-வுக்காக, 3 புள்ளி 8 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு 500 தொழிலாளர்கள் என்ற கணக்கில் முதலாளிகளுக்கு 600 ரிங்கிட் சம்பள உதவித் தொகை வழங்கப்படும்.

4 மாதங்களுக்கு இந்த உதவி அளிக்கப்படும்; நான்காயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே அந்த உதவித் தொகை என்ற விதிமுறையும் தளர்த்தப்பட்டுள்ளது.

4 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்காகவும், முதலாளிகள் அந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த கூடுதலாக ஒரு பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுகப்பட்டுள்ளது; கூடுதல் தடுப்பூசிகளை வாங்கத் தேவையான 400 மில்லியன் ரிங்கிட் அதிலடங்கும்.

மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்த்துள்ளது!

இவ்வேளையில், 12 மற்றும் 18 வயது வரையிலான 64 லட்சம் பதின்ம வயதினருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

அவர்களில், இவ்வாண்டு SPM தேர்வெழுதுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather