← Back to list
செலவுபடித் தொகை அதிகரிப்பு!
Jun 22, 2021

Covid-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் தன்னார்வலர்களாகக் கைகொடுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இம்மாதம் முதல் அன்றாட செலவுபடித் தொகை ஒரு மடங்கு அதிகரிக்கப்படுகிறது.
பிரதமர் PM Tan Sri Muhyddin Yassin அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அதன் வழி சுமார் 19 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு அன்றாட அலவன்சாக 100 ரிங்கிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாளில் 12 மணி நேரத்திற்கும் கூடுதலாகப் பணியாற்றுவோர் அத்தொகையைப் பெறுவர்.

மலேசியா நேற்று வரை மூன்று வகையான சுமார் 86 லட்சம் தடுப்பூசி டோஸ்களைக் கொள்முதல் செய்திருக்கிறது.
Pfizer வகை தடுப்பூசிதான் அதிகளவில் பெறப்பட்டுள்ளது.
அவ்வகை தடுப்பூசி 40 லட்சத்துக்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்து Sinovac மற்றும் Astrazeneca வகை தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் Can Sino வகை தடுப்பூசி பெறப்படும் என சுகாதார அமைச்சு கூறியது.

Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாத முஸ்லீம் அல்லாத இறுதிச் சடங்குச் சேவை நிறுவனங்களின் பெர்மிட் மீட்டுக் கொள்ளப்படலாம் என தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
நடப்பில் இறுதி ஊர்வலங்கங்களை நடத்த அனுமதியில்லை.
இறுதி ஊர்வலங்களில் சிலர் கலந்து கொண்ட காணொளிகள் அண்மையில் வெளியானதை அடுத்து அமைச்சு அவ்வாறு நினைவுறுத்தியது.

புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனைக் கடைகள் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு முடக்கத்தின் இரண்டாவது கட்டத்தில் திறக்க அனுமதிக்கப்படலாம்.
அதன் தொடர்பில் அடுத்த வார வாக்கில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் குறைவாக இருக்கின்றது.
புதிதாக நாலாயிரத்து 743 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 566 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஜூலை முதல் தேதியில் இருந்து கோதுமை மாவின் விலை உயர்த்தப்படவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள தகவல் உண்மையில்லை.
அதன் விலையை அதிகரிக்க அரசாங்கம் எந்த தொழிற்சாலைக்கும் அனுமதி கொடுக்கவில்லை என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு விளக்கியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather