← Back to list
சம்பவங்களின் எண்ணிக்கையில் சற்று சரிவு!
Jun 21, 2021

நாடு முழுவதும் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை நாலாயிரத்துக்குக் குறைந்துள்ளது.
புதிதாக நாலாயிரத்து 611 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் தொடர்ந்து அதிகமாக ஆயிரத்து 346 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

KL, Bukit Jalil அரங்கில் பேரளவிலான தடுப்பூசி போடும் மையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
அங்கு நாளொன்றுக்கு பத்தாயிரம் தடுப்பூசி டோஸ்கள் போடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
நஷ்டத்தை எதிர்நோக்காமல் இருப்பதை உறுதிச் செய்யவே இதற்கு முன் பேரளவிலான தடுப்பூசி போடும் மையங்கள் திறக்கப்படவில்லை என அவர் விளக்கினார்.
“ bukan kita tak boleh buka ppv yg besar,kita tak buka sebelum ini bekalan kita tak cukup, kalau kita nak buka ppv mega, tak cukup bekalan, bazir lah duit, nanti rakyat marah kerajaan, bila bekalan dah mula sampai, barulah kita buka untuk tambahkan lagi vaksinasi kita.”
நாடு முழுவதும் இதுவரை 58 லட்சத்தும் மேற்பட்டோருக்கு முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
16 லட்சத்துக்கும் அதிகமானோர் முழுமையாக இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

முக்கியத் தேர்வுகளுக்கு அமரவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கு Covid-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் முடிவை மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
இவ்வேளையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பக்க விளைவுகள் குறித்து கவலைக் கொள்ளத் தேவையில்லை.
அது தற்காலிகமானதுதான் என அவர்கள் உத்தரவாதம் அளித்தனர்.
2021 ஆம் ஆண்டுக்கான SPM, STPM தேர்வெழுதும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களும் இளையோரும் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள இனி MySejahtera செயலி வழி பதிந்து கொள்ளலாம்.
அவர்களுக்கு Pfizer தயாரிப்பிலான தடுப்பூசியைப் போட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
MySejahteraவில் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் கீழ் அவர்கள் பதிந்து கொள்ள முடியும்.

2020 SPM தேர்வை முடித்த மாணவர்களுக்கு UPUonline விண்ணப்பங்களைச் சரிபார்த்து விவரங்களைப் பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஜூலை இரண்டாம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather