Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கோவிட் 19-னால் குறைந்தது ரத்த கையிருப்பு !

Jun 14, 2021


 

கோவிட் 19-னால் குறைந்தது ரத்த கையிருப்பு !

கடந்தாண்டை விட இவ்வாண்டு நாடு முழுவதுமுள்ள ரத்த வங்கிகளில் ரத்த கையிருப்பு 12. 3 விழுக்காடு சரிந்துள்ளது.

தேசிய ரத்த வங்கியில் மட்டும் அதன் எண்ணிக்கை 14.3 விழுக்காடு குறைந்துள்ளதாக தேசிய ரத்த வங்கியின் ரத்த மாற்று நிபுணரும் ரத்த தானம் வழங்குவோர் நிர்வகிப்புப் பிரிவுன் தலைவருமான Dr தேன்மொழி தர்மலிங்கம் கூறுகின்றார்.

கோவிட் 19-னால் குறைந்தது ரத்த கையிருப்பு !Dr. தேன்மொழி தருமலிங்கம்

இந்நிலை ஏற்படுவதற்கு முதன்மை காரணம் கோவிட் 19 பெருந்தொற்று தான் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறிய அவர்..

''பலர் தொற்றுப் பரவலுக்கு அஞ்சி முன்வர மறுக்கின்றனர், சிலர் சாலை தடுப்புச் சோதனைக்குப் பயந்து முன்வருவதில்லை'' என்றார்.

மேலும் MCO வால் நாடெங்கிலும் தமது தரப்பு நடத்தவிருந்த ரத்த தான் முகாம்களும் ரத்தானது ஒரு காரணம் என்றாரவர்.

பொது முடக்கம் காரணமாக ரத்த தானம் செய்ய முன்வர தயங்குபவர்களுக்குக் கைகொடுக்கும் விதமாக தமது தரப்பு என்ன அணுகுமுறையைக் கையாண்டுள்ளது என்பது குறித்தும் அவர் பேசினார்.

''எங்களது அகப்பக்கத்தில் நாங்கள் பதிவு ஆவணத்தை வைத்துள்ளோம். ஆர்வமுள்ளோர் அந்த பாரத்தை பூர்த்தி செய்து, சாலை தடுப்புச் சோதனையின் போது அதனைக் காண்பிக்கலாம்,'' என்றார்.

மற்றபடி ரத்த தானம் செய்யும் நடவடிக்கை நெடுகிலும் SOPக்கள் சரிவர பின்பற்றப்பட்டு வருவதால், தொற்று பரவல் அபாயம் குறித்து பொது மக்கள் அஞ்ச வேண்டாம் என Dr தேன்மொழி சொன்னார்.

Dr தேன்மொழியுடனான ராகாவின் முழு நேர்க்காணலைக் கேட்க கீழ் காணும் இணைப்பை சொடுக்கவும்:-

player.whooshkaa.com/episode?id=840050

 

நம் நாட்டில் சராசரியாக நாளொன்றுக்கு ஈராயிரம் ரத்த பைகள் தேவைப்படுகின்றன. தேசிய ரத்த வங்கியில் மட்டும் ஒரு நாளுக்கு 500லிருந்து 600 பைகள் வரையிலான ரத்தம் தேவைப்படுவதாக அவர் கூறுகின்றார்.

ஆனால் கோவிட் 19 மற்றும் அமுலில் இருக்கும் பொது முடக்கத்தினால் போதுமான ரத்த கையிருப்பைத் தங்களால் பெற முடியவில்லை என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ஒரு நாளுக்கு ஈராயிரம் பைகள் விகிதம், ஆயிரம் பேரின் உயிரைக் காப்பாற்ற அந்த ரத்த பைகள் பயன்படுகின்றன;

ஆனால் தற்போதுள்ள நிலைமையினால், ரத்த தானம் செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை அவர் மேற்கோள்காட்டி பேசினார்.

இதனிடையே நாட்டில் அதிகமான இளையோர் இருந்தும் அவர்களில் மிகக் குறைவானவர்களே ரத்த தானம் செய்ய முன்வருகின்றனர்.

இன்னும் அதிகமான இளையோர் ரத்த தானம் செய்ய முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறார் Dr தேன்மொழி.

மேலும் ரத்த தானம் செய்ய முன்வருவோரை ஊக்குவிக்கும் விதமாக, 50 முறைக்கு மேல் ரத்த தான, செய்தவர்களின் பெயர்களை, தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி தமது தரப்பு சுகாதார அமைச்சுக்கு பெயர் பட்டியல்களை அனுப்பி வைத்து வருவதாகவும் Dr தேன்மொழி சொன்னார்.

"ரத்த தானம் செய்வோம்; உலகத்தை துடிப்புடன் வைத்திருப்போம்" என்ற கருப்பொருளில் இன்று அனுசரிக்கப்படும் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு அவர் ராகா செய்தி பிரிவிடம் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather