← Back to list
நாலாயிரத்துக்கும் கீழ் குறையலாம்!
Jun 14, 2021
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் குறைவாக இருக்கின்றது.
புதிதாக நாலாயிரத்து 949 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 523 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சரவாக், KL, ஜொகூரிலும் கூட அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இம்மாத இறுதி வாக்கில் தினசரி Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் கீழ் குறையலாம் என ஆகக் கடைசி கணிப்புகள் காட்டுகின்றன.
பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறைகளைத் தொடர்ந்து பின் பற்றி வந்தாலும், கிருமித் தொற்றுப் பரவல் விகிதம் 0.9 க்கும் குறைவாக இருந்தாலும் அது சாத்தியம் என சுகாதாரத் தலைமை இயக்குனர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
நேற்று நாடு முழுவதும் R-Naught விகிதம் 0.91 ஆகப் பதிவாகியிருந்தது.
Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 44 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அவர்களில் 13 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரு முழுமையாக இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
KLலில் மிக அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வேளையில் இதுவரை ஒரு கோடியே 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிந்து கொண்டுள்ளனர்.
தேசிய அளவில் அவ்வெண்ணிக்கை 56.8 விழுக்காடாகும்.
Covid-19 கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க தேசிய தடுப்பூசித் திட்டத்தின் நான்காம் கட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin அதனைத் தெரிவித்திருக்கிறார்.
நான்காம் கட்டத் திட்டம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் இயங்கும் தொழில்துறைகளை உட்படுத்தியிருக்கும் என அவர் கூறினார்.
“Kita akan mula dengan beberapa sektor-sektor industri pada minggu ini di mana satu usaha PPV industri akan diselaraskan oleh Kementerian Perdagagngan Antarabangsa dan Industri, terutamanya bagi sektor perkilangan yang beroperasi sewaktu PKP.”
வேலையிடங்களை உட்படுத்திய clusterகள் உருவாகாமல் இருக்க அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான Khairy விளக்கினார்.
மற்றொரு நிலவரத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள Mines அனைத்துலக கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பேரளவிலான தடுப்பூசி போடும் மையமொன்று இயங்கத் தொடங்கியிருப்பதாக Khairy சொன்னார்.
அங்கு நாளொன்றுக்கு நாலாயிரத்து தொளாயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.
கட்டங் கட்டமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
SPM தேர்வை முடித்த மாணவர்கள் பொது உயர்க்கல்விக் கழகங்கள் மற்றும் பொது திறன் பயிற்சி கழகங்கள் ஆகியவற்றில் பயில UPUonline வாயிலாக புதிதாக விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ், அடிப்படை, டிப்ளோமா, இளங்கலை ஆகியவற்றை உட்படுத்திய மேல் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வி அமைச்சு கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather