← Back to list
முழு MCO: SOP-கள் குறித்து ஆராயப்படலாம்!
Jun 14, 2021
நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தால், முழு MCOவின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள SOPகளை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்!
அதன் தொடர்பில் சுகாதார அமைச்சு தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு ஆலோசனைகள் வழங்கும் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
அடுத்த வாரம் வாக்கில், 4 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா சம்பவங்கள் என்ற இலக்கை அடைய முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆகக் கடைசியாக, நாட்டில் 5 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது; 64 பேர் அத்தொற்றுக்கு பலியாகினர்.
கூடிய சீக்கிரமே கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி!
கோலாலம்பூரும், புத்ராஜெயாவும், எதிர்பார்க்கப்பட்டதை விட சீக்கிரமே அதாவது ஆகஸ்ட் மாதம் வாக்கில், கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்து விடும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்திய காலக்கட்டத்திற்கு நாட்டை தயார்படுத்த ஏதுவாக, அரசாங்கம் தற்போது தேசிய மீட்சி திட்ட வரைவை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
அத்திட்ட வரைவு இன்னும் ஒரு வாரத்தில் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மலேசியா!
மலேசியா தற்போது இரு வகை COVID-19 தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் மருத்துவ ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஒன்று அத்தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
BPR மேல்முறையீடு!
இதற்கு முன் அரசாங்கத்தின் BPR உதவி நிராகரிக்கப்பட்டவர்கள், நாளை தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை அதற்கு மேல்முறையீடு செய்யலாம்!
அந்த உதவி உண்மையிலேயே தேவைப்படுவோருக்கு சென்றடைவதை உறுதிச் செய்ய, சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களோடு தங்களது மனுவை உள்நாட்டு வருவாய் வாரியத்திடம் சமர்பிக்கலாம் என நிதி அமைச்சு தெரிவித்தது.
அங்கீகரிக்கப்படும் மனுக்களுக்கான BPR உதவித் தொகை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும்.
உலக இரத்த தான தினம்!
ஒருவர் அதிகப்பட்சம் ஆண்டுக்கு 4 முறை மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும்!
அதன் தொடர்பான தகவல்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்கின்றார் தேசிய ரத்த வங்கி இயக்குநர் Dr. Noryati binti Abu Amin.
"yang apheresis ini dia boleh menderma darah dua minggu sekali manakala untuk pendermaan darah utuh kita nasihatkan untuk dijarakkan 3 bulan sekali; Maksudnya, seseorang itu sekiranya dia sihat dan memenuhi kriteria2 untuk pendermaan darah maksimum dia boleh dermakan darahnya hanyalah 4 kali setahun”
இரத்த தானம் செய்பவரின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, அந்த வரையறை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக Dr. Noryati கூறினார்.
"ரத்த தானம் செய்வோம்; உலகத்தை துடிப்புடன் வைத்திருப்போம்" என்ற கருப்பொருளில் இன்று உலக ரத்த தான தினம் அனுசரிக்கப்படுகின்றது.
காய்கறிகள் விலையேற்றம் குறித்த புகார் இல்லை!
சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு கண்டிருப்பதாக தாங்கள் இன்னும் எந்த புகாரும் பெறவில்லை என, உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
காய்கறிகளுக்கான நடப்பு விலைவாசி நியாயமாக இருப்பதோடு, பண்டிகை காலத்தோடு ஒப்பிடுகையில் சில வகை காய்கறிகளின் விலை, குறைந்திருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
உதாரணத்திற்கு கிலோவுக்கு 15 ரிங்கிட் விலையில் விற்கப்பட்ட மிளகாய் தற்போது கிலோவுக்கு 6 ரிங்கிட்டாக குறைந்துள்ளதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
தக்காளி, வெள்ளரி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அண்மைய நாட்களாக விலையேற்றம் கண்டுள்ளதாக கூறி பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் குறித்து வினவப்பட்ட போது, அமைச்சு விளக்கமளித்தது.
பூ வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு!
முழு பொது முடக்க காலக்கட்டத்தில், பூ வியாபாரத் துறை மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பது, அத்துறை சார்ந்தவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலை கொடுத்திருப்பதாக, பூ வியாபாரிகள் கூறியுள்ளனர்.
இத்துறை சார்ந்தவர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் உயிர் பூக்களினால் ஏற்படக்கூடிய அதிகளவிலான நட்டங்களை கருத்தில் கொண்டு, கடுமையான SOPகளுக்கு உட்பட்டு, கடந்த சனிக்கிழமை முதல் இந்த பூ வியாபாரத் துறை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather