← Back to list
மேலும் இரு வாரங்களுக்கு முழு முடக்கம்!
Jun 11, 2021
நாடு முழுவதும் அமலில் உள்ள முழு முடக்கம் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஐந்தாயிரத்துக்கும் கூடுதலாகப் பதிவாகி வருவதால், அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் முழு முடக்கம் ஜூன் 15ந்தில் இருந்து ஜூன் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
நாடு முழுவதும் புதிதாக ஆறாயிரத்து 849 Covid-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமாக ஈராயிரத்து 558 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
KL, சரவாக்கிலும் கூட அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பெர்லிசில் இரண்டு சம்பவங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.
COVID-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கப்பட்டதில் இருந்து நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் சுமூகமாக உள்ளன.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு கூறியிருக்கிறார்.
அண்மைய காலமாக நாளொன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு வரும் நிலையில், விரைவில் அவ்வெண்ணிக்கையை 3 லட்சத்தில் இருந்து 4 லட்சம் வரை அதிகரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசாங்கம் அம்மாநிலத்தில் இலவச Covid-19 மருத்துவ பரிசோதனைகளைத் தொடருவதை மலேசிய மருத்துவச் சங்கம் வரவேற்றுள்ளது.
Covid-19 பீடித்திருந்தும் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டறிய, அத்திட்டம் முக்கியப் பங்காற்றுவதாக அது தெரிவித்தது.
Covid-19 கிருமித் தொற்றை விரைந்து துடைத்தொழிக்க, அத்தகையத் திட்டத்தை நடத்துமாறு MMA பிற மாநிலங்களையும் கேட்டுக் கொண்டது.
பேக்கெட் சமையல் எண்ணெய் விற்பனையை கண்காணித்து, அதன் உற்பத்தியை அதிகரிக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் FOMCA அவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
உதவித் தொகை வழங்கப்படும் பேக்கெட் சமையல் எண்ணெய்யை வாங்க தங்களுக்கு தொடர்ந்து சிரமமாக இருப்பதாக முன்னதாக பொது மக்கள் குறிப்பாக உட்பறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் FOMCA விடம் புகார் கொடுத்திருந்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather