Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: அலட்சியம் வேண்டாம்!

Jun 09, 2021


தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைவதால், அத்தொற்று குறித்து அலட்சியமாக இருந்து விட வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஒரு நாள் அலட்சியம் என்பது, மோசமான பின் விளைவுகளை கொண்டு வரும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும், சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியுள்ளார்.

covid-19: அலட்சியம் வேண்டாம்!

ஏற்கனவே மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில்  COVID-19 நோயாளிகளுக்கான கட்டில் பயன்பாடு அதிகரித்து, நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த மே 24ஆம் தேதி 96 விழுக்காடாக இருந்த அதன் பயன்பாடு, தற்போது 104 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக அவர் சொன்னார்.

 

நாளொன்றுக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

ஜூலை  மாதம் தொடங்கி ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு COVID-19 தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அவ்வெண்ணிக்கை நாளொன்றுக்கு தலா 3 லட்சம் பேர் என அதிகரிக்கப்படும்.

அதற்காக நாடு முழுவதும் மேலும் அதிகமான தடுப்பூசி போடும் மையங்கள் திறக்கப்படும் என, தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளார் அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்தால், அக்டோபர் மாதத்திற்குள் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைந்து விட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட பதிந்துக் கொண்டுள்ளனர்.

covid-19: அலட்சியம் வேண்டாம்!

இவ்வேளையில், 12 முதல் 17 வயது வரையிலான பிள்ளைகள், COVID-19 தேசிய தடுப்பூசிக்கான ஐந்தாம் கட்ட திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அத்திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pfizer தடுப்பூசியை பிள்ளைகளுக்கு போடுவது குறித்த அனுமதிக்காக தாங்கள் இன்னும் காத்திருப்பதாக அமைச்சு கூறியது.

அதன் மீதான இறுதி முடிவை, தேசிய மருந்தக ஒழுங்குமுறை நிறுவனம் NPRA அறிவிக்கும்.

 

2ஆவது நாளாக எண்ணிக்கையில் மாற்றம்!

நாட்டில் தொடர்ந்து 2ஆவது நாளாக தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்திற்கு கீழ் இறங்கியது.

covid-19: அலட்சியம் வேண்டாம்!

ஆகக் கடைசியாக ஐயாயிரத்து 566 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

அதில் சிலாங்கூரில் மட்டும் ஆயிரத்து 500க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின.

76 பேர் அத்தொற்றுக்கு பலியானதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை மூவாயிரத்து 536ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் 82 ஆயிரத்து 797 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

SOP மீறல்!

COVID-19 தடுப்பு SOPகளை மீறிய குற்றத்திற்காக நேற்று முன் தினம் மட்டும் தொள்ளாயிரத்து 70 பேர் கைதாகியுள்ளனர்.

அவர்களில் தொள்ளாயிரத்து 17 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டது; 49 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

எஞ்சிய 4 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

covid-19: அலட்சியம் வேண்டாம்!

தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதது, சுவாசக் கவசம் அணியாதது, அனுமதியின்றி மாவட்டம்-மாநிலம் கடந்து பயணித்தது, வாகனங்களில் கூடுதல் எண்ணிக்கையிலானவர்கள் பயணித்தது ஆகிய குற்றங்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 

DS Tajuddin-னுக்கு தண்டம் விதிக்கப்பட்டது!

Prasarana நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Dato Seri Tajuddin Abdul Rahmanனுக்கு ஆயிரத்து 500 ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

covid-19: அலட்சியம் வேண்டாம்!

கடந்த மாதம் LRT விபத்து தொடர்பான செய்தியாளர் சந்திப்பை நடத்திய போது சுவாசக் கவசம் அணிய தவறியதற்காக அவருக்கு அத்தண்டம் விதிக்கப்பட்டதாக Dang Wangi காவல் துறை தெரிவித்தது.

 

 

 


 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather