← Back to list
தங்கும் விடுதிகள் தாக்குப் பிடிக்க கூடுதல் உதவி தேவை-MyBHA!
Jun 03, 2021
PEMERKASA PLUS உதவி திட்டத்தின் கீழ் தங்கும் விடுதிகளுக்கு சில உதவிகளை வழங்கியுள்ள அரசாங்கத்திற்கு நெகிரி செம்பிலான் மாநில மலிவு விலை தங்கும் விடுதிகள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது!
எனினும் இவ்வுதவியானது தங்களுக்கு 5 விழுக்காடு வரை மட்டுமே உதவக் கூடியது என தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஆறுமுகம், எனவே தங்களுக்கென சிறப்புச் சலுகைகள் சிலவற்றை, கோரிக்கையாக அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகச் சொன்னார்.
மின்சாரக் கட்டணக் கழிவு, தங்கும் விடுதி பணியாளர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி, வரி விலக்கு, முறையான Moratorium சலுகை என மொத்தம் 15 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருப்பதாக சுரேஷ் சொன்னார்.
சுரேஷுடன் ராகா செய்தி பிரிவு நடத்திய நேர்க்காணலைக் கேட்க கீழ் காணும் இணைப்பை சொடுக்குங்கள்;
https://player.whooshkaa.com/episode?id=836042
கோவிட் 19-னால் கடந்த ஓராண்டாகவே மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தங்களுக்கு, PEMERKASA PLUS திட்டத்தின் கீழ் அரசாங்கம் அறிவித்த வெறும் பத்து விழுக்காடு மின்சாரக் கட்டணக் கழிவு போதுமானது அல்ல என்றாரவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather