Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அமலாக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றன!

May 31, 2021


அமலாக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றன!

நாட்டில் நாளை முழு முடக்கம் தொடங்கும் நிலையில், நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய காவல் துறை உரிய அமலாக்க நடவடிக்கைகளை மேம்படுத்தியிருக்கிறது.

சாலைகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எனவே வீட்டிலேயே இருப்பது நல்லது என்றும் தேசிய காவல் படைத் தலைவர் Datuk Seri Acryl Sani Abdullah பொதுமக்களுக்கு நினைவுறுத்தினார்.  

“Justeru, org ramai yang tidak ada keperluan mendesak untuk keluar, seboleh-bolehnya, tangguhkanlah pergerakan tersebut. Bagi peluang kepada mereka yang perlu bergerak atas perkhidmatan perlu untuk melaksanakan tugas mereka.”

நாடு முழுவதும் இரு வார காலத்திற்கு 800 சாலைத் தடுப்புச் சோதனைகள் போடப்படும் என்றும் அவர் சொன்னார்.

அமலாக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றன!

நாடு முழுவதும் புதிதாக 6,824 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் மிக அதிகமாக ஈராயிரத்து 111 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சரவாக், ஜொகூர், கெடா ஆகிய மாநிலங்களிலும் அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பெர்லிசில் மிகக் குறைவாக 12 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அமலாக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றன!

Covid-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள தேதி கொடுக்கப்பட்டவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செல்லத் தவறினால் அவர்களுக்கு தண்டம் விதிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.  

தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

நடப்பில் உள்ளது போல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் வருகையை உறுதிச் செய்வது தொடரும் என அவர் சொன்னார்.

“Kita masih lagi terus cuba berhubung dengan mereka dan menggalakkan mereka datang untuk janji temu, mungkin itu option yang last kalau sekiranya kita nak melaksanakan pun tapi hari ini kita masih lagi dengan pendekatan untuk menghubungi mereka supaya mereka dapat memenuhi janji temu mereka.”  

மற்றொரு நிலவரத்தில், Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கோலாலம்பூரில் நடமாடும் truck வாகனமொன்று பயன்படுத்தப்படும் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான Khairy கூறினார். 

கொரோனா தொற்றுப் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் அந்த truck வாகனம் பயன்படுத்தப்படும்.  

அமலாக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றன!

தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera வழி பதிந்து கொண்டவர்கள், அச்செயலியில் தங்களது முகவரியைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

MySejahtera மூலம் பதிந்து கொண்ட சிலருக்கு வேறொரு மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தேதி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளதை அடுத்து அவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமலாக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றன!

நாளை முதல் முழு முடக்கம் அமலுக்கு வரும் நிலையில், நாட்டில் உணவு கையிருப்பு போதுமான அளவில் இருக்கிறது.

எனவே பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சு கூறியிருக்கிறது.

அதே சமயம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு தொடர்ந்து இருப்பது உறுதிச் செய்யப்படும் என்றும் அமைச்சு உத்தரவாதம் அளித்தது.   

அமலாக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றன!

நாளை நாடு முழுவதும் அமுலுக்கு வரவுள்ள பொது முடக்கத்தின் கீழ், போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள நான்கு சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

தனியார் வாகனங்கள், டெக்சி மற்றும் e hailing சேவை, பொது போக்குவரத்துகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவே அந்த நான்கு சேவைகளாகும்.

தனியார் வாகனங்கள் மற்றும் டெக்சி e hailing ஆகியவற்றில் ஓட்டுனர் உட்பட இருவருக்கு மேல் இருக்க கூடாது.

எனினும் தடுப்பூசி போடுவது, மருத்துவரைக் காணச் செல்வது உள்ளிட்ட அவசர சேவைகளை நாடும்போது ஒரு வாகனத்தில் அதிக பட்சம் மூவர் இருக்கலாம் என அமைச்சு அறிக்கை வழி கூறியிருக்கின்றது.

நில மற்றும் நீர் போக்குவரத்துகள் 50 விழுக்காட்டு பயணிகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பயணிகளின் எண்ணிக்கை குறைவே என்பதால், விமானச் சேவைகளும் அனுமதிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

அமலாக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றன!

நாட்டில் முழு முடக்கம் அமலில் உள்ள காலம் நெடுகிலும் வாடிக்கையாளர்களின் மின்சார மீட்டரைப் பரிசோதிப்பது, மின்சாரக் கட்டண ரசீதை நேரடியாக வெளியிடுவது ஆகியவை வழக்கம் போலவே இருக்கும்.

அதே சமயம் Kedai Tenaga கடைகள் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரையிலும் சுய சேவை கட்டண முகப்புகள் காலை மணி 8.15ந்தில் இரவு 8 மணி வரை செயல்படும் என்றும் TNB தெரிவித்திருக்கிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather