Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பொது முடக்கம்: இருவர் மட்டுமே வெளியேற அனுமதி!

May 31, 2021


நாளை முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கியதும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஒரு வீட்டில் இருந்து இருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்!

அதுவும் அவர்கள் வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூர அளவு மட்டுமே பயணிக்க முடியும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

பொது முடக்கம்: இருவர் மட்டுமே வெளியேற அனுமதி!

ஒருவேளை, மருத்துவம் சார்ந்த தேவைகள், COVID-19 பரிசோதனை, பாகாப்பு  உள்ளிட்ட வேறு சில அவசர தேவைகள் இருந்தால், ஒரு வீட்டில் இருந்து அதிகப்பட்சம் 3 பேர் மட்டுமே வெளியேற முடியும் என்றாரவர்.

இதனிடையே, பேரங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்.

அவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும்.

இரவு 8 மணிக்கு பிறகு வணிக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்பதால், யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

"Walaupun tidak ada curfew, saya harap rakyat kita tidak keluar kerana tidak ada aktiviti perniagaan lagi selepas pukul 8 malam."

எண்ணெய் நிலையங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்

எனினும், நெடுஞ்சாலைகளில் உள்ள எண்ணெய் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்.

திறந்த வெளியில், மெதுவோட்டம் உள்ளிட்ட தொடுதல் அற்ற உடப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆனால், உடற்பயிற்சிகள் மேற்கொள்வோர் கட்டாயம் 2 அல்லது 3 மீட்டர் தூர தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

இதனிடையே, அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு இதற்கு முன் வழங்கிய அனைத்து வேலை அனுமதி கடிதங்களும் நாளை முதல் செல்லாது! 

 அக்கடிதங்கள் இன்றோடு காலாவதியாகிவிடும் என்பதால், வேலைக்காக மாநிலம் மற்றும் மாவட்டம் கடந்து பயணிக்க வேண்டியவர்கள், புதிய அனுமதி கடிதத்தை அந்தந்த அமைச்சுகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என  Datuk Seri Ismail Sabri தெரிவித்துள்ளார்.

அலுவலகங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டையும் மீறி சில தனியார் துறை முதலாளிகள், தங்களது தொழிலாளர்களை அலுவலகம் சென்று வேலை செய்ய வற்புறுத்துவதாக தமக்கு புகார்கள் கிடைத்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

"Saya terima aduan terdapat majikan yang paksa pekerja mereka berkerja melebihi daripada 60% (kapasiti) yang ditetapkan. Jika ia berlaku, saya harap pekerja membuat laporan kepada kementerian sumber manusia dan pihak polis."

 இவ்வாறு விதிமுறை மீறி செயல்படும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

 விதிமுறை மீறும் முதலாளிகள் குறித்து புகாரளிக்குமாறு அவர் தொழிலாளர்களை வலியுறுத்தியுள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், நாளை முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்த பிறகு, திருமணமானவர்கள் தூரத்தில் வாழும் வாழ்க்கைத் துணையை சென்றுக் காண, மாநிலம் மர்றும் மாவட்டம் கடந்துச் செல்வதற்கான அனுமதியும் வழங்கப்படாது!

COVID-19 பரவலை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருமாறு Datuk Seri Ismail Sabri கேட்டுக் கொண்டார்.

 

MySejahtera செயலியில் புதிய அம்சம்!

MySejahtera செயலியில், COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தேதியை மாற்றிக் கொள்ளவும், ரத்துச் செய்வதற்கான வசதி ஏற்படுத்தி தரப்படும்.

பொது முடக்கம்: இருவர் மட்டுமே வெளியேற அனுமதி!

தவறான தேதி கிடைத்தவர்கள் அதில் மாற்றம் செய்துக் கொள்வதற்காக அப்புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படுவதாக, COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.

 

தினசரி எண்ணிக்கை குறைந்தது!

பொது முடக்கம்: இருவர் மட்டுமே வெளியேற அனுமதி!நாட்டில் தினசரி பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

சனிக்கிழமை 9 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை, நேற்று ஆறாயிரத்து 999க்கு குறைந்தது.

 

EPF அலுவலகங்கள் மூடப்படுகின்றன!

பொது முடக்க அறிவிப்புக்கு ஏற்ப, நாளை தொடங்கி 14 நாட்களுக்கு

நாடு முழுவதும் உள்ள ஊழியர் சேமநிதி வாரியம் EPF அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

எனவே, EPFபில் தங்களது நேரடி சந்திப்புகளை, வேறு தேதிக்கு மறு அட்டவணையிட்டுக் கொள்ளுமாறு அதன் சந்தாதாரகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.  

 

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட எண்ணம்!

COVID-19 பெருந்தொற்று சீற்றத்திற்கு மத்தியில், லட்சக் கணக்கானோர் புகையிலை பழக்கத்தை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது, உலக சுகாதார நிறுவனம் WHOவில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதில் குறிப்பாக ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

புகையிலைப் பழக்கத்தை கைவிடுவோம் என்ற கருப்பொருளில் இன்று உலக புகையிலை அற்ற தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather